பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1043

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stylet

1042

subclinical


stylet : துருவுகம்பி : 1. ஒரு புழைக்குழல் அல்லது குழல் கருவிக்குள் உள்ளிட்டு விறைப்பாக்கும் அல்லது உள்வழியை சுத்தம் செய்யும் கம்பி, 2. மெல்லிய சலாகை.

stylo : மென்கம்பி; முனை : பொட்டெலும்பின் முள் எலும்புத் துருத்தம்.

stylohyoid : நாவடி முள்ளெலும்பு சார்ந்த.

styloid (styloid process) : பொட்டு முள்ளெலும்பு : பொட்டெலும்பின் புறநீளமான முள்ளெலும்பு.

styloiditis : முள்ளென்பழற்சி : முள்ளென்புத் துருத்த அழற்சி.

stylomastoid : முள்முகையென்புசார் : பொட்டெலும்பின் முள்ளெலும்புத் துருத்தம் மற்றும் முகையுருத்துருத்தம் தொடர்பான,

stylomaxillary : தாடை முள்ளெலும்பு சார்ந்த.

stylus : எழுத்தாணி; வரைவி : 1. கூர்கருவி, 2. துருவு கம்பி அல் லது மெல்லிய கம்பி அல்லது ஊசி கொண்டு விறைப்படையச்செய்தல், கால்வாயை சுத்தப்படுத்தல், 3. ஒரு குச்சி வடிவான முனை கொண்ட மருந்துப் பொருள்.

styptic : குருதி உறைவி; குருதி தடுப்பி; குருதி உறைப்பி : குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான்.

subacute : இடைநிலை; முனைப்புக் குறைவான : முனைப்பு நிலைக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைப்பட்ட நிலை குறைத் தீவிரம்.

subanal : மலவாய் அடுத்த : மல வாய்க்கு அடுத்துக் கீழுள்ள.

subarachnoid space : சிலந்திச் சவ்வு இடைவெளி : சிலந்திச் சவ்வுக்குக் கீழே, அதற்கும் மூளையின் அடிச்சவ்வுப் படலத்திற்குமிடையில் உள்ள இடைவெளி. இதில் மூளைத் தண்டுவட நீர்மம் அடங்கி உள்ளது.

subcapsular: உறையடி : உறைக்கடியில், பெருமூளை உறையை குறிக்கும்.

subclass : துணைவகை : குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை.

subclavian : கழுத்துப் பட்டை அடியில்; காரையடி : கழுத்துப் பட்டை எலும்புக்கு அடியில் உள்ள.

subclinical : போதிய மருத்துவக் காரணம் இன்மை; நோய்க்குறி