பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1044

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subclone

1043

sub-involution


தோன்றா : அடையாங்காணத் தக்க நோயை உண்டாக்குவதற்குப் போதிய மருத்துவக் காரணம் இல்லாதிருக்கிறது.

subclone : துணைமுளைவாக : முளை வகையில் உருவாகும் மாற்றமடைந்த செல்லின் வழித் தோன்றல்.

subconscious : அரையுணர்வுத்தளம்; உள்மனம்; அடிமனம்; அகமனம் : அரையுணர்வுநிலை; உள்ளத்தின் அடியுணர்வுத் தளம்.

subconsciousness : அடியுணர்வுத்தன்மை : ஒருவர் உணர்ந்தறியாமல் மனம் செயல்படும் நிலை.

subcortex : புறணியடி : பெருமூளைப் புறணிக்கு அடியில் உள்ள மூளையின் ஒரு பகுதி.

subcosta! : விலா எலும்பின் அடியில்.

sub costal vein : கீழ்விலாச் சிகை.

sub-culture : கிருமி மறுவளர்ப்பு.

sab-cutaneous : தோலுக்கு அடியில்; தோலடி.

subdural : மூளை நடு உரைகீழ்.

suberosis : தக்கை நோய் : தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி.

subfamily : துணைக்குடும்பம் : ஒரு குடும்பம் மற்றும் ஒரு குழுவினத்துக்கு இடையே உள்ள வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு.

subfebrile : சிறிது காய்ச்சலான : உடலின் வெப்ப நிலை சற்று கூடுதலாக இருக்கும்போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு.

subfrontal : நெற்றி மடலடி : நெற்றி மடலுக்கு அடியில் அமைந்துள்ள.

subglottic stenosis : குரல்வளையடிக் குறுக்கம் : தொடர்ந்து மூச்சுக் குழாயுள் குழல் செலுத்தலால், குரல் வளையின் கீழ்ப் பகுதி அல்லது மூச்சுக்குழலின் மேல்பகுதி ஒடுங்கியிருத்தல்.

subgrondation : எலும்படியிறக்கம் : மண்டையோட்டு எலும்பு முறிந்து ஒரு பகுதி மற்றொன்றுக்குக் கீழமைந்த நிலையிலுள்ள எலும்பு முறிவு.

subhyoid : உவையென்படி : உவையென்புக்குக்கீழ்.

sub-involution : கருப்பை சுருங்காமை : குழந்தை பிறந்தபின் குறிப்பிட்ட காலத்திற்குள் கருப்பை குறிப்பிட்ட அளவுக்குச் சுருங்காதிருத்தல்.