பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1048

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sucking wound

1047

suggestibility


sucking wound : உள்ளடங்கிய காயம் : மார்புச் சுவர்க் காயம், நுரையீரலுறையை பாதித்து.

sucralfate : சுக்ரால்பேட் : சுக்ரோஸ் ஆக்டா சல்ஃபேட்டின் ஒரு உப்புமூல அலுமினிய உப்பு, வயிற்றுப் புண்ணில் அது அமில சுரப்பை பாதிக்காது. ஆனால் நார்மூல அணுவை வளர்ச்சிக் காரணி மற்றும் புண்ணின் அடிப்பகுதியுடன் இணைந்து பெப்சின் மற்றும் அமிலம் தொடர்பைக் குறைக்கிறது.

sucrase : சுக்ரேஸ் : இரு சேக்கரைடுகளை ஒரு சேக்கரைடாகப் பிரிக்கச் செயலூக்கியான ஹைட்ரோலேஸ்.

sucrose : சுக்ரோஸ்; சர்க்கரை : கரும்பு வெல்லம், கரும்பு சர்க்கரை, வள்ளி சர்க்கரை, மாப்பாகு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இது உடலில் நீரால் பகுத்தல் மூலம் டெக்ஸ்டிரோஸ் ஃபிரக்டோஸ் ஆகப் பகுக்கப்படுகிறது.

sucrosemia : சுக்ரோஸ்குருதி : இரத்தத்தில் சுக்ரோஸ்இருத்தல்.

sucrosuria : சிறுநீர்ச் சுக்ரோஸ்; சிறுநீர்ச் சர்க்கரை : சிறுநீரில் சுக்ரோஸ் இருத்தல்.

sudamina : வியர்க்குரு; வியர்வைக்கட்டி.

sudan blindness : சூடால்குருடு.

sudatory : புழுக்க மருந்து : வியர்வையூட்டும் மருந்து.

sudden death : திடீர் மரணம் : முன்பு பார்க்க உடல் நலத் துடனிருந்தவர், சில நிமிடம் அல்லது சிலமணி நேரத்துக்குள் நோய் வாய்ப்பட்டு இறத்தல்.

sudomotor : எச்சில் தூண்டு : உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டும்.

sudoriferous : வியர்வைசுரப்பி : வியர்வையை வெளிப்படுத்துகிற சுரப்பி.

sudorific : வியர்வை மருந்து : வியர்வையைத் தூண்டும் மருந்து.

suffocation : மூச்சுத் திணறல்; மூச்சடைப்பு.

suffusion : நைப்பு; மேற்படர்வு : 1. வெளியேறிவடிதல், 2. வெளிப்பரப்பு சிவத்தல். 3. ஒரு நீர்மத்தால் ஈரமடையும் நிலை.

sugar : சர்க்கரை : மருந்தின் சர்க்கரைப் பூச்சு; வெல்லச் சத்து, சர்க்கரைச் சத்துப் பொருள்.

sugar reaction : சர்க்கரை வேதியியல் மாற்றம்.

suggestibility : வசிய நிலை : வசியத்திற்கு ஆட்பட்ட நிலை; கருத்துத் தூண்டுதலுக்கு உட்