பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ament

104

amino acids


தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றாதிருந்தால் அது 'தொடக்க நிலை மாதவிடாய் தோன்றாமை" எனப்படும். மாதவிடாய் ஒரு முறை தொடங்கிய பிறகு தோன்றாமல் இருந்தால், அது "இரண்டாம்நிலை மாதவிடாய் தோன்றாமை" எனப்படும்.

ament : வளர்ச்சி குன்றிய மனத்தையுடைய.

amentia : மனவளர்ச்சிக் குறை பாடு; உளக்குழப்பம்; மூளைத் திறனிழப்பு : பிறவியிலிருந்து மனவளர்ச்சி குன்றியிருத்தல், மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்திய நிலையிலிருந்து (Dementia) இது வேறுபட்டது.

amethocaine hydrochloride : அமெத்தோக்கைன் ஹைட்ரோ குளோரைடு : கோக்கைன் என்ற மருந்துப் பொருளில் சில பண்புகளையுடைய ஒரு செயற்கைப் பொருள். தண்டுவட உணர்ச்சி இழப்பு மருந்தாகப் பயன்படு கிறது. 60 மி.கி. அளவுடைய மாத்திரைகளாக இது பயன் படுத்தப்படுகிறது.

ametria : கருப்பை இன்மை : பிறவியிலேயே கருப்பை இல்லாதிருத்தல்.

ametropia : பார்வைக் குறைபாடு; குறைபார்வை : கண்ணின் ஒளிக்கோட்ட ஆற்றல் குறைபாட்டினால் உண்டாகும் பார்வைக் குறைபாடு.

amicar : அமிக்கார் : அமினோ காப்ராய்க் அமிலத்தின் வணிகப் பெயர்.

amidin : மாச்சத்துக் கரைசல் : கரைசல் நிலையிலுள்ள மாச்சத்து.

amikacin : அமிக்காசின் : பாக்டீரியச் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்) தரங்குறை வதைத் தடுக்கும் ஒரு நோய் எதிர்ப்புப்பொருள். இது 'கனாமைசின் பொருளிலிருந்து எடுக்கப்படும் செயற்கை வழிப் பொருள்.

amiken : அமிக்கென் : அமிக்காசின் என்னும் எதிர்ப்புப் பொருளின் வணிகப் பெயர்.

amimia : செயல் உணர்விழப்பு; செய்கை ஆற்றலிழப்பு.

amino acids : கரிம அமிலங்கள் (அமினோ அமிலங்கள்) : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதிலாக கரிம (அமினோ) அணுக்களைக் கொண்ட கரிம அமிலங்கள் (NH2) புரதத்தை நீரியல் பகுப்பு செய்வதன் விளைவாக இவை கிடைக்கின்றன. இவற்றிலிருந்து உடல் தனது சொந்தப் புரதங்களை மறுபடியும் தயாரித்துக் கொள்கிறது. இவை அனைத்தையும் உடல் உற்பத்தி செய்துகொள்ள