பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1052

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

superinfection

1051

supinate


ளுடன்கூட ஒன்றைக்கொண்டு வருதல் அல்லது தூண்டுதல்.

superinfection : மிகைத்தொற்று : உடலின் இயல்பான நுண்ணு யிர்க்குழுமம், பெரும்பாலும் உயிரி எதிர்ப்புகளால் வெகுவாகக் குறைந்தபின், சந்தர்ப்பவாத நுண்ணுயிர்களின் படையெடுப்பால் ஏற்படும் தொற்று.

superinvolution : மிகுஉள்ளடங்கல் : குழந்தை பிறப்பிற்குப் பிறகு கர்ப்பப்பையின் அளவு மிகவும் குறைந்துவிடுதல்.

supernatant : மேல்மிதக்கும் : 1. வெளிப்பரப்பில் மிதக்கும். 2. மண்டிப்படிவுக்கு மேல் எஞ்சி உள்ள தெளிவான நீர்மம்.

superior : மேலான; மேலுடல் : உடல் உட்கூறியலில் மேல் இரு பகுதிகள்.

superiormeatus : மூக்குமேலிடுக்கு.

superior venacava : மேல்பெரும் சிரை.

supernatent fluid : மேல்தெளி திரவம்.

supernumerary : மேற்பொருள் எண்ணிக்கை மிகைப்பு; அளவிலா : குறிப்பிட்ட, வழக்கமான, வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட.

supernumerancy tooth : மிகை பற்கள்.

superovulate : மிகுமுட்டைய : வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமான அளவில் முட்டைகள் உற்பத்தியாதல்.

superovulation : கருவணுப் பெருக்கம்.

superoxide : சூப்பர் ஆக்ஸைடு : அடர்அமில மூலக்கூறு (HO2 (H+O-2) இதில் O2சூப்பர் ஆக்ஸைடு மூலக்கூறாகும். இது மிகவும் மறிவினை செயல் வடிவ ஆக்ஸிஜன் ஆகும்.

superparasite : ஒட்டொட்டு : ஒட்டுயிரின் ஒட்டுயிர்.

supersaturate : மிகுசெறிவு : இயல்பு நிலைக்கும் அதிகமான செறிவடைவு.

superscription : மருந்தெடு : மருந்துச் சீட்டில் முதலில் எழுதப்படும் குறியெழுத்து. எடுத்துக்கொள் அல்லது முறைப்பட்டியல்.

superstructure : மேல்கட்டமைப்பு : மேற்பரப்புக்கு மேல் உள்ள அமைப்பு.

supervascularisation : மிகை நாளப்பெருக்கம் : கதிரிக்க சிகிச்சையால் புற்று செல்கள் அழிவதைத் தொடர்ந்து இரத்த நாளம் (ஒட்டம்) அதிகரிப்பு.

supinate : அங்கை மலர்வி; மல்லாந்து : உள்ளங்கை மேலிருந்து மாறு திருப்பு.