பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1053

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

supination

supramaxillary


supination : கை மலர்விப்பு; வெளிப்புரட்டல்; மல்லாத்துதல் : உள்ளங்கை மேற்புறம் இருக்குமாறு கைவிரித்தல்.

supinator : படுக்கை நிலை; கைக்கீல்தசை : உள்ளங்கையை விரிக்க உதவும் தசை.

supine : மல்லாந்த; படுக்கை நிலை : உள்ளங்கை மேற்புறம் திரும் பியிருக்குமாறு செயலற்றுப்படுத்திருத்தல்.

supportine bandage : ஏந்துகட்டு; தாங்கு கட்டு.

suppository : உள்வைப்பு; உட்கரை குளிகை; செருகு மருந்து; குதச்செருகு; மல விளக்கி : மலக் குடல், சிறுநீர்த்துளையுள்ளே நுழைந்து அங்கேயே கரைய விட்டு விடப்படும் கூருருளை அல்லது நீளுருளை வடிவக் குளிகை.

suppressant: மட்டுப்பகுதி : 1.மட்டுப்படுத்தலைத் தூண்டுதல். 2. சுரப்பு அல்லது கழிப்பை தடுக்கும் பொருள்.

suppression : அமுக்கம்; அடக்கல்; அமிழ்த்தம் : நோய் வகையில் நோயின் போக்கினைத் தடுத்தல்; குருதிப் போக்கினை நிறுத்துதல்; உணர்ச்சி வகையில் உணர்ச்சியை அமுக்கி வைத்தல்.

suppressor cells : மட்டுப்படுத்தும் அணுக்கள் : டீ உதவும் அணுக்களின் செயலை குறைப்பதன் மூலம், விளைவிய விளைவுகளை தடுக்கும் டீ (சிடி8) நிண அணுக்கள்.

suppuration : சீழ்கட்டு; )சீழாதல்; சீழ்ப்பிடித்தல்; சீழ்மயம் : சீழ் வைத்தல்.

suprabulge : மிகை துருத்தம் : பல்லின் மூடும் பரப்பு நோக்கி குவியும் பல்லின் தலைப்பகுதி.

supracerebellar : சிறுமூளைமேல் : சிறுமூளையின் மேற்பரப்புக்கு மேலாக.

suprachoroid : குருதிப்படல மேல் : கண்களிக் கருநீல குருதிப் படல வெளிப்பக்கம்.

supraclavicular : கழுத்துப் பட்டை எலும்புமேல்; காரை எலும்பின்மேல் : கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்நிலையிலுள்ள.

supraclavicular fossa : காரை எலும்பு மேற்குழி.

supracondylar : எலும்பு முனைமேல்; முண்டுமேல் : எலும்பு முனைப் முண்டுப்பொருத்துக்கு மேலேயுள்ள.

supracostal : விலா எலும்புமேல் : விலா எலும்புக்கு மேலேயுள்ள.

supramaxillary : மேல்தாடை : மேல்தாடைக்கு மேற்பட்ட பகுதி.