பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1057

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

swelling

1056

symbolia


கழுத்து, காலுறுப்புகளில் வலியுடன் தடிப்புப் பத்துகள், வெள்ளணுப் பெருக்கத்துடன் தோன்றும் கோளாறு, கார்ட்டிக்கோஸ்டீராய்டு சிகிச்சை யில் சரியாகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் ஆர்.டி.ஸ்வீட் பெயராலமைந்தது.

swelling : வீக்கம் : 1. உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், உடலின் ஒரு பகுதி வழக்கத்தை விடப் பெரிதாதல். 2. ஒரு மேடு.

swimmer's itch : நீந்துபவோர் அரிப்பு : சில ஸ்கிஸ்டோசோம் புழுக்களின் முட்டைப் புழுக்கள் நிறைந்த நீரில் நீந்துபவர்களின் தோலில் கொப்புளங்கள் ஏற்படுதல்.

swimming pool granuloma : நீச்சல் குள குருணைக்கட்டி : கடற்கரைச் சூழலில் வேலை செய்பவர்களில் எம்.மேரினம் உண்டாக்கும் தோலில் உள்ள குருணைக்கட்டி.

sycosis : கத்திப்பரு; நாவிதன் தோற்படை; முகச்சொறி : தாடைத் தோல் நோய்.

sycosis barbae : மயிக்கால் நோய்.

sycosis nuchae : பிடரித் தடிப்பு : கழுத்துப் பிடரியில் தோலில் ஏற்படும் தோல் தடிப்பு நோய்.

sylvatic plaque : காட்டுயிர்கொப்புளம் : காட்டெலி அல்லது அணில்களில் பரவியுள்ள, நெறிக்கட்டிய வீக்கத்தழும்பு.

sylvian aqueduct : சில்வியன் நீர்நாளம் : டச்சு நாட்டு உடற்கூறி யலாளர் ஃப்ரான்காய்ஸ் சில்வியல் பெயர் கொண்ட மூளையிலுள்ள மூன்றாவது நீரறையிலிருந்து நான்காவது நீரறைக்குச் செல்லும் ஒரு ஒடுக்கக் கால்வாய்.

symballophone : ஒலிகளின் பக்கமறியப் பயன்படும் இரு மார்புக் கோட்புப் பகுதிகளைக் கொண்ட ஒரு ஸ்டெதாஸ் கோப்.

symbiont : ஒருங்கொத்துவாழுயிர் : மற்றொரு உயிருடன் ஒருங்கொத்து வாழும் உயிரி.

symbiosis : இணைவாழ்வு; கூட்டு வாழ்க்கை : உடலில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உயிரிகள் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டும், நன்மை செய்து கொண்டும் இணைந்து வாழ்தல்.

symblepharon : இமை விழி ஒட்டல்; விழி இமை ஒட்டு நோய்; இணைவிமை : கண் விழியுடன் இமை ஒட்டிக் கொள்ளுதல்,

symbolia : தொடு அறிவுத்திறன்: தொடு உணர்வு கொண்டு பொருள்களை கண்டு அறியும் திறன்.