பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1058

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

symbolism

1057

sympathotic...


symbolism : குறியீட்டமர்வு : 1. நடைபெறும் ஒவ்வொன்றையும் தனது நினைவுகளின் குறியீடாகக் கருதும் இயல்பல்லாத மனநிலை. 2. உணர்வறியா நிகழ்ச்சிகளை உணர்நிலையில் மாற்று வடிவ பிரதியுருவாகத் தோன்றும் முறை.

symbolisation : உருவக வடிவமாதல் : இரண்டு பொருட்களுக் கிடையேயான தொடர்பு அல்லது ஒற்றுமை காரணமாக, ஒரு கருத்து அல்லது ஒரு பொருள் மற்றொன்றாகத் தோன்றும் உணர்வில்லா செயல்முறை.

Syme's amputation : மேல் கணுக்கால் துண்டிப்பு : கணுக்கால் மூட்டுக்கு மேலே துண்டித்தல். செயற்கைகால் உறுப்பு பொருத்துவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

Syme's operation : சைமின் அறுவை : ஸ்காட்லாந்து அறுவை மருத்துவப் பெயர் கொண்ட அறுவை முறை. 1. கணுக்காலுடன் சேர்த்து கணுவெலும்புகளையும் வெட்டியெடுத்தல், 3. சிறுநீர்த்தாரை வெளி அறுவை.

symmelus : உறுப்புகளிணைந்தகரு : காலடிகளுடன் அல்லது இல்லாமல் உறுப்புகள் இணைந்த முதிர்கரு.

symmetry : இருபக்க இயைபு; சம அமைவு; சமச்சீர் : உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ஒத்த பகுதிகள் வடிவம், அளவு, இருக்கைநிலை ஒத்திருத்தல்.

sympathectomy : பரிவு நரம்பு அறுவை; பரிவு நரம்பு எடுப்பு : பரிவு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல்.

sympathetic : பரிவு : 1. பரிவு நரம்பு மண்டலம் தொடர்பான, 2. பரிவால் உண்டாகும், பரிவு தொடர்பான.

sympathetic ganglion : பரிவு நரம்பு முடிச்சு.

sympathetic nerve : பரிவு நரம்பு.

sympathetic nervous system : பரிவு நரம்பு மண்டலம் : முது கந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டு பரவலாக அமைந்திருக்கும் நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி, சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது. இம்மண்டலத்தின் முக்கிய பணி, எ-டு: அபாயம் நேரிடும்