பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1064

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synteny

1063

syringoma


மூட்டு உறைச்சவ்வுப் படலத்தில் ஏற்படும் வீக்கம்.

synteny : ஒன்றியமரபணு : ஒரே நிறக்கீற்றில் இரண்டு அல்லது மேற்பட்ட மரபணுக்கள் அமைந்திருப்பது.

synthesis : மீட்டிணைப்பு; செயற்கைத் தயாரிப்பு : அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.

syntrophoblast : ஒன்றிய ஊட்ட அணு : ஊட்ட அணுவின் ஒன்றிய குழிய வெளியுறை.

syntropic : ஒன்றிணை வளர்ச்சி : 1. ஒரே திசையை காட்டும் நோக்கிய, 2. நோயின் வளர்ச்சியில் பல காரணிகளுக்கிடையே உள்ள உறவு நிலைய சுட்டிக்காட்டும்.

syntrophy : ஒன்றிணை நோய் : இரண்டு வியாதிகள் ஒன்றுடனொன்று இணையும் போக்கு.

syphilid : கிரந்திப் புண் : கிரந்தியினால் உண்டாகும் தோல் புண்.

syphilis : கிரந்தி; மேகப்புண்; மேக நோய் : திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின்னர் குருதி நாளங்கள் இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற்றையும் தாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைகளை பீடிக்கிறது.

syringe : பீற்று மருந்துசி; பீச்சு குழாய்; உட்செலுத்தி; பீச்சி; சிரிஞ்சு :உடலில் விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்துவதற்கான குழல் ஊசி.

syringeal : காது உட்குழாய் சார்ந்த.

syringitis : காதுத் தொண்டை தொடர்புக் குழலற்சி : காது உட்குழல் அழற்சி நோய்.

syringobulbia : முகுளப் புழை நோய் பேச்சுக் குழறல் : அண்ணச் செயலிழப்பு ஹர்னெர் நோயியம், விழியாட்டம், முக உணர்விழப்பு ஆகிய குறிகள் தோன்றுவது முகுளத்தில் நீர்மக் குழிவறை வளர்வதால்.

syringocoele : புழைவீக்கம் : 1. தண்டுவடமைக் கால்வாய். 2. வேற்றிடத் தண்டுவடத்தில் குழிவறை கொண்ட தண்டுவட உறைமச்சை வீக்கம்.

syringoma : புழைக்கட்டி : பருவ மடைந்த பெண்களில் பல சதை நிற மஞ்சள் கொப்புளக் கட்டிகளாகத் தோன்றும், விழியிமைகள், கழுத்து மேல் முன் மார்பு, பெண்புழை ஆகியவற்றின் வேர்வை சுரப்பிக்கட்டி