பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1075

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

teletherapy

1074

tendon


ஒரு தூர இடத்துக்கு அனுப்பும் தொழில் நுட்பம்.

teletherapy : கதிரியக்க மருத்துவம்; தொலை சிகிச்சை : புற்று நோய் போன்றவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கோபால்ட் அல்லது கேசியம் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை.

telogen : மயிர்வளர்நிலை : மயிர்க்கால் சுழலின் ஒய்வுப்படி நிலை.

temperament : மனப்போக்கு; இயல்பிலா உளப்பண்பு; மனப்பாங்கு : தனிமனிதரிடம் உணர்ச்சி, செயல்களுக்கு அடிப்படையாக இயல்பாக அமைந்த உடல் உளநிலைப் பாங்கு.

temperature : வெப்ப நிலை : உடலின் இயல்பான வெப்ப நிலை.

temple : கன்னப்பொட்டு; பொட்டு : செவித்தடம், கண்ணின் புறக் கோணத்திற்கும், காது மடலின் மேற்பகுதிக்கும் இடையில் உள்ள தலையின் பகுதி.

temporal : நெற்றிப் பொட்டு.

temporal bone : பொட்டெலும்பு : தலையின் இரு புறமும், மண்டையோட்டின் உச்சிக்கும் பக்கங்களுக்கும் உரிய எலும்பிணைகளுக்குக் கீழேயுள்ள நடுக்காதினைக் கொண்டிருக்கிற எலும்புகள்.

tempororomandilbular : பொட்டெலும்பு-கீழ்த்தாடை சார்ந்த : பொட்டெலும்பு, கீழ்த்தாடை தொடர்பான.

temporomandibular joints syndrome : பொட்டெலும்பு-தாடை மூட்டு நோய் : பொட்டெலும்பு தாடை முட்டில் ஏற்படும் வலி பெரும்பாலும் பல் முரண் தாடை காரணமாக உண்டாகிறது.

TEN : மேல் தோல் அழுகல் : மேல் தோல் அழுகல் உண்டாகும் நச்சுத் தன்மை.

tenaculum : கொக்கி வடிவக் கருவி : அறுவை மருத்துவத்தின்போது அறுவை மருத்துவர் பயன்படுத்தும் பற்றுக் கொக்கி.

tendon : தசைநாண் : தசைக் கோடியிலே தசைத் தொடர்பு