பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1076

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tendonitis

1075

terfenadine


உடனோ உள்ள வலிய இழைமத்தளை.

tendonitis : தசை நாண் அழற்சி : தசை நாண் வீக்கம்.

tenesmus : நீர்ச்சுருக்கு; சூடு பிடிப்பு; மலச்சிக்கல்; வயிற்றளைச் சல்; மலக்கடுப்பு : அடிக்கடி சிறுநீர் கழிக்கவிழைதல்.

tenigue : தசைச் சோர்வு.

tenoplasty : தசை நாண் ஒட்டு அறுவை : ஒரு தசை நாணைச் சீர்படுத்துவற்கான ஒட்டு அறுவை மருந்து.

tenorrhaphy : தசை நாண் தையல்; கிழி நாண் தைப்பு : தசை நாண்களை இணைத்துத் தையலிடுதல்.

tenosynovitis : தசை நாண்; சவ்வழற்சி நாண்; உறையழற்சி : ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம்.

tension : மன உலைவு; மன இறுக்கம்; மன அழுத்தம் : மன அமைதியற்ற நிலை; அடங்கிய விசையுணர்ச்சி நிலை.

tensor : விறைப்பி; நீட்டுத்தசை.

tenotomy : தசைநாண் பிளவு : தசைநாண் பிளவுபடுதல்.

tentacle : உணர்நீட்சி.

teratogen : கோர உருப்பிறப்பு : கோர உருப்பேறு நச்சு மருந்துகள், கதிரியக்கம், இயற்கைப் பொருள்கள், நோய்கள் காரணமாக கருவிலேயே குழந்தை உரித்தரிபுற்று கோர உருவம் பெறுதல்.

teratogenesis : பேருருவளர்ச்சி : வளர்கரு அல்லது முதிர்கருவில் உடற்குறைகள் உண்டாதல் (அதிமிகை) பேருரு வளர்ச்சி.

teratology : கோர உருப்பிறப்பியல் : கோர உருப்பேறு பற்றி ஆராயும் அறிவியல்.

teratoma : கருக்கட்டி : கருவகத்தில் உண்டாகும் கட்டி இது புறப்படலம், இணைப்புத் திசுக்கள் சார்ந்தவை. இவை பெரும்பாலும் உக்கிரமானவையாக இருக்கும்.

teratospermia : பிறழ்விந்தணு : இயல்பு மாறிய விந்தணுக்கள் இருத்தல்.

terbutaline : டெர்புட்டாலின் : மூச்சுக்குழாயை விரிவடையச் செய்யும் மருந்து, கடுமையான ஈளை நோய்க்குப் (ஆஸ்துமா) பயன்படுகிறது.

terfenadine : டெர்ஃபெனாடைன் : ஹெச் ஏற்பித் தடுப்பு ஹிஸ்டமின் எதிர்ப்பி.