பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1077

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

terminal

1076

tetanus


terminal : ஈற்றுநிலை : முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி.

Terminal bars : இறுதிக்கம்பிகள் : மேல்படல அணுக்களுக்கிடை யேயுள்ள வெளிகளை நுண்கம்பிகள் வடிவ தடிமனான அணுவிடைப் பசை நிரப்பி மூடுவதோடு அவற்றை ஒன்றிணைக்கிறது.

termination of pregnancy : கருவழிப்பு : கர்ப்பத்தை அழித்தல்.

terminal joint : கடைக்கணு : கடைமுட்டு.

TerroCortril : டெராகோர்ட்ரில் : கண், காது, மூக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். ஆக்சி டெட்ரா சைக்ளின், கோர்ட்டிசால், பாலிமிக்சின்-பி ஆகியவை கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர்.

terramycin : டெராமைசின் : ஆக்சிடெட்ராசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர். நுண்ம ஒட்டுயிர்ப் பசை மருந்து.

terron (ganic) : திகில்; கிலி : நடுக்கம், பேரச்சம்.

tertian : முறைவலிப்புக்காய்ச்சல்.

tertiary : மூன்றாம் வரிசை; மூன்றாம் நிலை; மூன்றாம்படி.

testis (testicle) : விரை (அண்டம்); விரை (விந்தகம்) : ஆணின் கோசத்தில் (உயிரின விரைப்பை) அடங்கியுள்ள இரண்டு சுரப்பு உறுப்புகளில் ஒன்று. இவை விந்தணுக்களை உருவாக்குகின்றன. ஆணின் பாலின இயக்குநீர்களையும் கொண்டிருக்கின்றன.

test meal : சோதனை உணவு : இரைப்பையின் கதிர்ப்படப் பரிசோதனை அல்லது, இரைப்பை உட்பொருட்களை வேதிய முறையில் ஆய்வு செய்ய உதவும் அளவில் சிறிய, குறிப்பிட்ட தரமும் பொருள்களும் கொண்ட உணவு.

testosterone : விரை இயக்குநீர் : இனக்கீற்றின் நடுநாயக ஆண்பால் கூறு. விரைகளிலிருந்து சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்). இரண்டாம் நிலை ஆண் பண்புகளுக்கு இவை காரணமாகும். மார்பகப் புற்றின்போது கருப்பைக் குருதிப் போக்கினைக் கட்டுப் படுத்தவும், ஆண்களிடம் வளர்ச்சிக் குறைவைப் போக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

test-tube baby : சோதனைக் குழாய்க் குழந்தை :செயற்கைக் கருவூட்டு முறை மூலம் பிறந்த குழந்தை.

tetanus : நரப்பிசிவு நோய்; இசிவு நோய்; வில் வாத சன்னி; வாய்பூட்டு இசிவு நோய் : மிகு