பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ammonium chloride

107

amnioscopy


இருமல் மருந்துகளில் கபத்தை வெளிக்கொணரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிதாக வயிற்று மந்த நோயாளிகளுக்கு வயிற்று உப்புசம் அகற்றுகிற மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

ammonium chloride : அம்மோனியம் குளோரைடு : சிறுநீர்க் கோளாறுகளில் சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. அரிதாக கபம் வெளிக்கொணரும் மருந்தாகவும் பயன்படுகிறது.

ammonuria : அம்மோனியா மிகைச் சிறுநீர் : சிறுநீரில் அம்மோனியாக் கூறு மிகையாக இருத்தல்.

amnesia : மறதி நோய் (நினைவிழப்பு); மறதி : மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது "முன்னோக்கிய மறதி" எனப்படும்; கடந்தகால நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது "பின்னோக்கிய மறதி” எனப்படும்.

aminocentesis : கருச்சவ்வுத் துளைப்புச் சோதனை : அடி வயிற்றுச் சவ்வின் வழியாகக் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக் குழியினைத் துளைத்தல். குழந்தை பிறப்பதற்கு முன்னர் இனக்கீற்றுக் கோளாறுகள், வளர்சிதை மாற்றப் பிழை பாடுகள், முதிர்கருக் குருதி நோய்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்கும் சோதனைக்காகத் திரவ மாதிரியை எடுப்ப தற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

aminography : கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம் ; பனிக்குட வரைவி : கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பையினுள் ஒளி ஊடுருவாத ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்தியபின், அந்தச் சவ்வுப் பையினை ஊடு கதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் எடுத்தல். இதில் கொப்பூழ்க் கொடியும், நச்சுக் கொடியும் பதிவாகும்.

amnion : கருச்சவ்வுப் பை ; பனிக் குட உறை : குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பை. இதில் முதிர்கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும். இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர்கருவுடன் கொப்பூழ்க் குழியில் இணைக்கப்பட்டிருக்கும்.

amnionitis : கருச்சவ்வுப் பை வீக்கம் : பனிக்குட அழற்சி.

amnioscopy : கருநோக்குக் கருவி பனிக்குட நோக்கி : அடி