theophorin
1079
thermophile
என்னும் மர உப்புச் சத்துடன் தொடர்புடைய ஒரு மருந்து. ஆனால் அதைவிடக் கிளர்ச்சி ஊட்டும் திறன் குறைவானது. அதைவிட அதிகச் சிறுநீர் தூண்டும் திறனுடையது. தொண்டை நோய்களுக்குப் பயன்படுகிறது.
theophorin : தியோஃபோரின் : ஃபெனிண்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
theophylline : தியோஃபில்லின் : காஃபின் தொடர்புடைய, சிறு நீர்க்கழிவைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து. எனினும், மூச்சடைப்பு, மூச்சுவிடுவதில் இடர்ப்பாடு, ஈளை நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
therapeutic embolization : குருதிக் குழாயடைப்பு : ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல்.
therapeutics : நோய் நீக்க இயல்; நோய் நீக்கக் கலை; மருந்து முறையியல்; பண்டுவம் : நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து இயல்.
therapeutic vaccine : நோய் நீக்க அம்மைப் பால்.
therapeutist : நோய் நீக்க வல்லுநர்.
therapist : சிகிச்சையாளர் : சிகிச்சையளிப்பதில் திறமை வாய்ந்த ஒருவர்.
therapy : நோய் நீக்கத் துறை.
thermal : வெப்பம் சார்ந்த; வெப்பம் தொடர்பான.
thermoanalgesia : சுடுவலி :வெப்ப முட்டுவதால் வலி உண்டாகும் நிலை.
thermoanaesthesia : தட்வெப்பு உணர்விழப்பு : வெப்ப உணர்வையும் குளிரையும் உணரும் தன்மையிழப்பு.
thermogenesia : வெப்பாக்கம் : மனித உடலில் வெப்பம் உண்டாதல்.
thermolabile : வெப்பச்சீர்குலைவு; வெப்பத்தில் மாறும் : வெப்பத் தினால் எளிதில் மாற்றப் பெறத்தக்க அல்லது சீர் குலையத்தக்க.
thermometer : வெப்ப மானி; வெப்பஅளவி : வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்கான கருவி. இதில் அடங்கியுள்ள பொருளின் கன அளவைப் பொறுத்து வெப்ப நில அளவிடப்படுகிறது. மருத்துவ வெப்பமானியில் உடலின் குறைந்த அளவு வெப்ப நிலையிலிருந்து ஏறுமுகமாகக் குறிக்கப்பட்டிருக்கும்.
thermophile : உயர்வெப்ப உயிரிகள்; மிகைவெப்ப வளர் உயிரிகள்.