பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1082

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thigh

1081

third ventricio


thigh : தொடை : இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே அமைந்துள்ள காலுறுப்பின் பகுதி.

thigmotropism : ஊறெதிரு உணர்வு : ஊறுதலுணர்ச்சிக்கு எதிரான தூண்டுதல் உணர்வு காரணமான அசைவு.

thimble bladder : விரற்முமிழ் நீர்ப்பை : பெருமளவு குறுகிய சிறுநீர்ப்பை.

thinking : சிந்தித்தல் : கற்பனை, தரமறிதல், மதிப்பிடுதல், முன் னறிதல், திட்டமிடல், படைப்பாற்றல், விரும்புதல் ஆகியவை கொண்ட மனவியக்கம்.

thionguanine : தியோங்குவானின் : வளர்சிதை மாற்ற எதிர்ப்பு மருந்து உட்கருப் புரதக்கூட்டிணைப்பைத் தடுக்கிறது. இதனால், கடும் குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்குக் குருதி வெள்ளணுப் புற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

thiopentone : தியோபென்டோன் : குறுகிய நேரம் நோவகற்றும் மருந்தாக ஊசிவழி செலுத்தப்படும் ஒரு பார்பிட்டுரேட்டு மருந்து, அறுவை மருத்துவத்தின் ஊக்க அழிவுக் கூட்டுப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

thioridazine : தியோரிடாசின் : நோவகற்றித் துயிலூட்டும் மருந்து. குளோர்புரோமாசின் மெல்லரில் என்ற மருந்துடன் நெருங்கிய தொடர்புடையது.

third generation cephalosporins : மூன்றாம் தலைமுறை செப்லோஸ்போரின்கள் : செஃபடாக்ஸிம், செஃபாஸிடின், செஃப்டிரையாக்ஸோன் ஆகியவை போன்ற பல நோயியர் எதிர்ப்பி மருந்துகள் வகை. அவை அமைப்பில் பெனிசிலின்கள் போன்றவை பெனி சிலினேஸ் தயாரிக்கும் நுண்ணுயிர்களுக்கு எதிராகப் பயன்படுபவை.

third heart sound : மூன்றாம் இதய ஒலி : இதய விரிவின் முதல் நிலையில் மகாதமனி வால்வு மூடிய 0.15 நொடிக்குப் பிறகு தோன்றும் குறைதொனி வேக ஒலி. அது கழுத்துச் சிரையின் 'வி' அலையை ஒத்தமைந்து உள்ளது. அது அல்லது வலது இதயக்கீழறையால் உண்டாவது.

third intention : மூன்றாம் நிலை : ஒரு காயம் குருணைத் திசு வளர்ந்து ஆறுவது.

Thomsen's disease : தாம்சன் வியாதி : டேனிஷ் மருத்துவர் ஆஸ்மஸ் தாம்சன் பெயர் கொண்ட பிறவித் தசையிறுக்கம்.

third ventricle : மூன்றாம் நீரறை : பார்வைத் தலைமங்கள் இரண்