பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1083

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thirst

1082

Thorn test


டுக்கிடையே உள்ள ஒரு ஒடுங்கிய குழிவறை. அது முன்னே பக்க நீரறைகளுடன் பின்னே நான்காம் நீரறையுடன் தொடர்பு கொள்கிறது.

thirst : தாகம் : நீர்குடிக்க விருப்பப்படும் உடலுணர்வு.

thoracentesis : மார்புச் கூட்டுநீர் வடித்தல் : மார்பு வரி உட்குழியில் அழற்சியால் வீக்கத்தால் சேரும் நீர்மத்தை குழாய் மூலம் வடித்தகற்றல்.

thoracic : மார்புக்கூடு சார்ந்த; மார்பக நெஞ்சு சார்ந்த : நெஞ்சுக்கூடு தொடர்புடைய.

thoracic cage : மார்புக்கூடு.

thoracic cavity : மார்புக்குழிப்பு; மார்பறை.

thoracic duct : மார்பக நிணநீர்க் குழல்; மார்பக நாளம்.

thoracic vertebra : மார்பு முதுகெகெலும்பு.

thoracopagus : மார்பிணை இரட்டையர் : இரண்டு குறைவடிவ முதிர் கருக்குழந்தைகள் மார்புகள் ஒட்டியுள்ளன.

thoracoplasty : மார்புக்கூடு அறுவைச் சீரமைப்பு; மார்பறைச் சீரமைப்பு : மார்புக் கூட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீரமைப்புச் செய்தல். முன்பு காச நோய் மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டது. காச நோய் மருந்துகள் வந்தபின் இது அரிதாகவே பயன்படுத்தப் படுகிறது.

thoraco pneumograph : மார்பு வளி வரைவு : மார்பின் மூச்சியக்க அசைவுகளைப் பதிவு செய்யும் ஒரு கருவி.

thoracoscope : மார்பு உள்வரிச் சவ்வு ஆய்வுக்கருவி; மார்பறை ஆய்வு நுரையீரல் உறைநோக்கி : மார்புச் சுவரில் ஒரு சிறு துளையிட்டு, அதன் மூலம் மார்புக் குழியினுள் செருகி, மார்பு உள் வரிச்சவ்வுப் பரப்புகளை ஆராய்ந்தறிவதற்கான ஒரு கருவி.

thoracotomy : மார்புக்குழி அறுவை; மார்பறைத் திறப்பு; மார்பகத் திறப்பு : மார்புக் குழியை அறுவை மருத்துவம் மூலம் திறந்து பார்த்தல்.

thorax : மார்புக்குழி; மார்புக்கூடு; நெஞ்சுக் கூடு : மார்புக்கூடு; நெஞ்சுக்கூடு.

thorn sign : முள்குறி: வலது நுரையீரலுறை நீர் ஊறிய நிலையில், சிறு பிளவின் தடிப்பு கதிர்ப்படத்தில், ஒரு தெளிவற்ற ஊசியுருவ நிழலுரு மார்புப் பக்கச் சுவரில் துவங்கி உள்பக்கமாகக் குறுகுகிறது.

Thorn test : தார்ன் சோதனை : கார்ட்டிக்கோட்ரோபின் பயன்