பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1084

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thought

1083

thrombasthenia


படுத்தி செய்யப்படும் அண்ணீரக் குறையறியும் சோதனை. நலமான மனிதரில் இரத்தச் சுழற்சியில் ஒடும் இயோசின் நிறமேற்கும் வெள்ளணுக்குறை உண்டாக்கும் ஆனால் அண்ணீரகக் குறைவுள்ளவரில் அல்ல. அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் தார்ன் பெயர் கொண்டது இச்சோதனை.

thought : சிந்தனை; எண்ணம்; நினைவு : எண்ணம்; கருத்து பிறர் உடல் நலனில் அக்கறை காட்டுதல்.

thought block : சிந்தனைத் தடை: சிந்தனை தடைபடுதல்.

thought-reading : தொலைவிலுணர்தல் : பிறர் எண்ணம் கண்டு உணர்தல்.

thread : நூல் : 1. ஒரு மெல்லிய இழையமைப்பு. 2. தையலுக்கு உதவும் பொருள்.

threadworm : கீரைப்பூச்சி; நூற் புழு : குழந்தைகளின் மலக்குட லிலுள்ள நூலிழை போன்ற புழு. பைப்பெராசின் என்ற மருந்தினை ஒரு வாரம் கொடுத்து இதைக் குணமாக்கலாம். இப்புழு மீண்டும் பீடிக்காமல் தடுக்கச் சுகாதார முறைகளைக் கையாள வேண்டும்.

three point suture : முப்புல்ளித் தையல் : தோல் மடிப்பு, பிறழாமல் வைக்கு அடித்தோலூடு தையல்.

threonine : திரியோனின் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

threshold : தாங்கெல்லை : புலன் உணர்வெல்லை; ஒரு நிலைக்கு மேல் பொருள் வெளியேற்றப்படுதல்.

thrili : நாடி அசைவதிர்வு; தொடுவுணர்வதிர்வு; சிலிர்ப்பு : நரம்புத் துடிப்பதிர்வு. தொடு உணர்வு மூலம் அறியப்படுகிறது.

throat : தொண்டை : உணவுக் குழாய், குரல்வளை, மூச்சுக் குழல்; மிடறு.

throatiness : கரகரப்பு : தொண்டை கம்மிய நிலை.

throat swab : தொண்டை துடைப்பான் : தொண்டைக்குழி ஒத்தும் பஞ்சு.

throaty : கரகரப்பான; தொண்டை கட்டிய.

throb : நாடியதிர்வு : நாடித் துடிப்பு.

throes : வேதனைத் துடிப்பு : வயா நோவு; பிரசவ வேதனை: பிறப்புத் துன்பம்.

thrombasthenia : குருதிக்கட்டிக் குறை : தட்டனுக் கோளாறால் உண்டாகும் இரத்தம் ஒழுகு