பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1086

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thromboembolism

1085

thymocytes


thromboembolism : குருதி உறைக்கட்டி; குருதி உறைத்துகள் வேற்றிட அடைப்பு : குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல்.

thrombogenesis : உறைக்கட்டியாக்கம் : இரத்த உறைகட்டி உருவாதல்.

thromboendarterectomy : குருதி உறைக்கட்டி அறுவை : தமனியி லிருந்து குருதி உறைக்கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

thromboendarteritis : தமனிச் சவ்வு வீக்கம் : தமனியில் குருதி உறைந்து தமனியின் உள்வரிச் சவ்வீக்கம் ஏற்படுதல்.

thrombopaenia : தட்டணுக்குறை : இரத்தத் தட்டணுக்களின் இயல்புக்கு மாறாகக் குறைதல்.

thrombophlebitis : சிரைச்சுவர் வீக்கம்; சிரைகுருதி உறைவு : சிரையில் குருதி உறைவு ஏற்பட்டு சிரையின் சுவர் வீக்கமடைதல்.

thromboplastic : உறைகட்டியாக்கி : இரத்தத்தில் உறைகட்டி உருவாவதை உண்டாக்கும்.

throm boblastin : திராம்போபிளாஸ்டின் : புரோத்ராம்பினை திராம்பினாக மாற்றும் ஒரு செரிமானப் பொருள் (என் சைம்).

thrombopoietin : திராம்போபாய்ட்டின் : எலும்பு மச்சையில் தட்டணு உருவாக்கத் தூண்டு பொருள்.

thrombosis : குருதியுறைவு : குருதிநாளங்களில் குருதி கட்டுதல்.

thrombus : நாளக் குருதிக்கட்டு; குருதி உறைக்கட்டி : குழாய் நாளங்களினுள் குருதிகட்டுதல்.

throtile : குரல்வளை, தொண்டைக்குழி.

thrush : சள்ளை நோய் : குழந்தைகளுக்கு வாயிலும் கழுத்திலும் வரும் மென்புடைப்பு நோய்.

thumb : கட்டைவிரல் : கைப்பெருவிரல்.

thymectomy : கழுத்துக்கணௌயச்சுரப்பி அறுவை : கழுத்துக் கணையச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல்.

thymine : தைமின் : டிஎன்ஏவில் உள்ள பிரமிடின் மூல அடி னைனுடன் இணையாக உள்ளது.

thymocytes : நிண அணுத்திசு : உயிரணு கழுத்துக் கணையச் சுரப்பியிலுள்ள மடல் புறப் பகுதியில் இருக்கும் அடர்த்தியான நிண அணுத் திசுவில் காணப்படும் உயிரணுக்கள்.