பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1091

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tissue fluid

1090

togaviruses


tissue fluid : திசு நீர் : உயிரணுக் கட்ட நீர்.

titration : வீரிய அளவீடு; தரம் பிரிக்கும் ஆய்வு : வேதியியல் செய்முறைகளில் கரைசல்களின் அமிலத் தன்மையை அல்லது காரத்தன்மையை அளவிடுவதற்கான பகுதி அளவுப் பகுப்பாய்வு முறை.

titre : வீரிய அளவு : வீரிய அளவீடு மூலம் அளவிடப்பட்ட ஒரு கன அளவில் அடங்கி உள்ள திட்டச் செறிவளவு.

TMJ : பொட்டெலும்பு-தாடை நோய் : பொட்டெலும்பு - தாடை மூட்டு.

TNM classification : டீ.என்.எம்; வகுப்பொழுங்கு வகைப்படுத்தல் : கட்டி, கணுக்கள், சேய்மத் தாக்கம் ஆகியவற்றின் நிலை ஒவ்வொன்றையும் எண்களால் குறிக்கும் அனைத்துலகப் படி நிலைப்படுத்தல்.

toadskin : தேரைத்தோல் : மிகவும் உலர்ந்து சுருங்கி, செதிள் உரியும் தோலின் நிலை, வைட்டமின் குறைவால் ஏற்படுவது.

Tobey-Ayer test : டோபீ-ஆயெர் சோதனை : குறுக்குச் சிரைப் புழைகளில் குருதியுறை கட்டி உள்ளபோது, அந்தப்பக்க கழுத்துச்சிரையை அழுத்தும்போது, மூளை தண்டுவட நீரழுத்தம் அதிகமாவதில்லை. இதைக் கண்டறிந்தவர்கள், அமெரிக்க, காது, தொண்டை மருத்துவர் ஜார்ஜ் டோபீ ஜீனியர் மற்றும் அமெரிக்க நரம்பு மருத்துவர் ஜேம்ஸ் அயர்.

tocography : பேற்று வரைவு.

tocolytic : சுருக்கத்தடுப்பி : குழந்தைப் பேற்றின்போது கருப்பை சுருங்குவதைத் தடுக்கும் பொருள்.

tocolysin : டோக்கோலைசின் : கருப்பை சுருக்கத்தின் வேகத்தை குறைக்கும் ஒரு மருந்து.

tocometer : டோக்கோமீட்டர் : கருப்பை சுருக்கங்களைப் பதிவு செய்யும் கருவி.

tocopheroi : டோக்கோஃபெரால் : செயற்கை வைட்டமின்-E என்ற ஊட்டச்சத்து. இது கோதுமை இளங்கருமுளை எண்ணெயில் உள்ளது. வழக்கமான கருச்சிதைவின்போது பயன் படுத்தப்படுகிறது.

toe : கால்விரல்.

togaviruses : டோகாவைரஸ்கள் : ஒரிழை ஆர்.என்.ஏவும் கொழுப் புறையும் கொண்ட நடுத்தர அளவுவைரஸ் குடும்பம். உதாரணம் : பல ஆர்போவைரஸ்கள் மற்றும் ரூபெல்லாவைரஸ்.