பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1094

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tonsillectomy...

1093

topography


ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள ஒருசிறு நிணத்திரள். 2. ஒவ்வொரு மூளை அரைக்கோள அடிப்பரப்பில் பின் முனையில் நடுக்கோட்டை நோக்கி நீண்டு உள்ள உருண்டைத் துருத்தம்.

tonsillectomy (tonsillotomy) : தொண்டை நிண முடிச்சு நிணத்திசுக் கோளம் : அறுவை மருத்துவம் மூலம் தொண்டையின் இருபுறம் நிணத்திசுக் கோளங்களை அகற்றுதல்.

tonsilloliths : அடிநாச் சதைகட்டி : அடிநாச்சதையில் ஏற்படும் கட்டிகள்.

tonsillopharyngeal : நிணக்கோளத் தொண்டை சார்ந்த : நிணக்கோளத் தொண்டை தொடர்புடைய.

tonsillotome : தொண்டை நிணக்கோள அறுவைக் கருவி : அறுத் தெடுப்பதற்கான கருவி.

tonsilitis : அடிநா அழற்சி; உள் நாக்கு அழற்சி : தொண்டைச் சதை அழற்சி.

tonsillotomy : அடிநா சதை அறுவை.

tonus : தசை இறுக்கம் : தசையில் சிறியதாக தொடர்ந்துள்ள இறுக்கம்.

tooth : பல் : ஒவ்வொரு தாடையிலும் வரிசையாக ஒட்டியுள்ள சிறு கடினப் பொருட்கள் வரிசையில் ஒன்று.

toothache : பல்வலி : பல்லில் அல்லது பல்லைச் சுற்றியுள்ள பகுதியில் வலி.

toothpaste : பற்பசை : பல்லின் வெளிப்பரப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் புருசுகள் உடைய பல்துலக்கும் கருவி.

tophus : நரம்பு மூட்டுக்கட்டி : கீல்வாதத்தின்போது, காது மடல், விரல் நரம்பு மூட்டுகள் போன்றவற்றில் ஏற்படும் கட்டி.

tonsils : தொண்டையில் இருபுறமும் : உள்வாயில் நாக்கின் அடி யிலுள்ள இரு நினத்திசுக் கோளங்கள். இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன.

topical : ஒருறுப்பு சார்ந்த; தளத்தில் இடஞ்சார் : ஒர் உறுப்பை மட்டும் பாதிக்கிற நோவகற்று மருந்துகள், பசை மருந்துகள் ஆகியவை தொடர்புடைய.

topognosis : தள அறிவு : தொடுவுணர்வுகளை நிலையறியும் திறமை.

topography : இட அமைப்பியல் : இடவிளக்கியல் உடலின் மண்டலங்களின் அமைவிடம் பற்றிய விவரிப்பு.