பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1095

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

topology

1094

total knee..


topology : தளவியல் : பிறப்பு வழிக்கும், பிறக்கும் குழந்தையின் வெளிப்படும் பகுதிக்கும் இடையிலுள்ள உறவுநிலை.

tormina : சூலைநோய் : கடுமையாக ஏற்படும் வயிற்றுவலி.

torpidity : மரமரப்பு : உணர்ச்சியற்ற தன்மை செயலற்ற தன்மை.

torsion : கருப்பை முறுக்கல் : கருப்பை திருகிக்கொள்ளுதல்.

torpor : தூண்டல் உணர்வு ஏற்புக் குறை : இயல்புத் தூண்டலுக்கு போதுமான விளைவின்மை, உணர்ச்சியற்ற தன்மை, செயல் இன்மை.

torticollis : கழுத்துச்சுளுக்கு; தலைத் திருகு; திருகு கழுத்து; கழுத்துக் கோணல் : கழுத்துச் சுளுக்கு வாதம்; கழுத்துப் பிடிப்பு. இதில் வலி இராது. தசைச் சுருக்கம் ஏற்பட்டுள்ள பக்கமாகத் தலைசாய்ந்து, மறு தோளின் பக்கமாக முகம் திரும்பியிருக்கும்.

torture : வன்துன்பம் : குரூரமான, மனிதத்தன்மையற்ற, மதிப்பைக் குலைக்கிற, வேண்டுமென்றே தரப்படும் தண்டனை. ஒரு செய்தியை அறிய அல்லது குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்க ஒருவருக்கு வேண்டு மென்றே உண்டாக்கப்படும், மன அல்லது உடல் ரீதியான வலி அல்லது துயரம்.

tosmilen : டாஸ்மிலன் : கண் சொட்டு மருந்தாகப் பயன்படும் மருந்து, கண்விழி விறைப்பு நோய்க்குப் பயன்படுகிறது.

Total Body Irradiation (TBI) : முழு உடல் ஒளிக்கதிர்ச் சிகிச்சை : சிலவகைப் புற்று நோய்களின் தொடக்க மருத்துவத்தில் பயன் படுத்தும் முறை.

total colonic lavage : முழுப் பெகுங்குடல் கழுவுதல் : இரைப் பையில் விரிவான அறுவை மருத்துவம் செய்வதற்கு முன்னர் பெருங்குடல் முழுவதையும் துப்புரவு செய்தல், நோயாளியை ஒரு திண்டுக் கோக்காலியில் உட்கார வைத்து, ஒரு குழாய் வழியாக இரைப்பைக்குள் செருகி பெருமளவு நீர்மத்தைச் செலுத்திச் சுத்தம் செய்கிறது. வெளியேறும் திரவம் சுத்தமாக இருக்கும் வரையில் நீர்மம் செலுத்தப்படுகிறது.

total hip replacement : முழு இடுப்பு மாற்றிவைத்தல் : தொடை யெலும்புத்தலை மற்றும் அதன் பொருத்துப் பரப்புக்கு பதிலாக முழு செயற்கைக் கருவியை வைக்கும் கருவி.

total knee replacement : முழு முழங்கால் மாற்றறுவை வலியுடன் கூடிய அழற்சியுற்ற முழங்கால் மூட்டு மற்றும் அதன் மூட்டுப் பரப்புக்கு மாற்றாக