பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amoebiasis

109

amphimixis


amoebiasis : அமீபா உறைவு; நெகிழிப்பாகு; நெகிழி நோய்; பெருங்குடல் சீழ்ப் புண் : பெருங்குடலில் ஒரணுவுயிர் என்டாமீபாக்கள் ஏராளமாக மொய்த்து இருத்தல். இதனால் சளித் தாக்குதல் ஏற்பட்டுச் சீழ்ப்புண் (அல்சர்) உண்டாகிறது. இது இழைமச் சளிச்சவ்விலும், இரத்தத்திலும் சீழ் உண்டாகி வயிற்று அளைச்சல் (சீதபேதி) ஏற்படுகிறது. குருதிநாள இரத்த வோட்டத்தில் அமீபா நுழையுமானால் கல்லீரல் சீழ்க்கட்டு உண்டாகிறது. மலத்தில் உள்ள அமீபாவைக் கொண்டு இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

amoebicide : அமீபா கொல்லி : அமீபாவைக் கொல்லும் ஒரு மருந்து.

amoeboid : அமீபா போன்ற : ஓரணுவுயிராகிய அமீபாவை (வயிற்றுடலி) வடிவிலும் அசைவிலும் ஒத்திருக்கிற உயிர் எடுத்துக்காட்டு: இரத்த வெள்ளை அணுக்கள்.

amoeboma : அமீபோமா; அமீபா கட்டி; நெகிழிக்கட்டி : பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது.

amoebicide : அமீபா கொல்லி : அமீபாவைக் கொல்லும் ஒரு மருந்து.

amoeboid : அமீபா போன்ற : ஓரணுவுயிராகிய அமீபாவை (வயிற்றுடலி) வடிவிலும் அசைவிலும் ஒத்திருக்கிற உயிர். (எ-டு) இரத்த வெள்ளை அணுக்கள்.

amoeboma : அமீபோமா; அமீபா கட்டி; நெகிழிக் கட்டி : பெருங்குடல் வாயில் அல்லது பெருங்குடல் குதவாயில் ஏற்படும் கட்டி. இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது.

amoxil : அமோக்சில் : அமோக்சிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

amoxycillin: அமோக்சிலின் : இது ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். இது காற்றுக் குழாய்ச் சுரப்புகளில் ஆம்பிசிலினைவிட எளிதாக ஊடுருவி மூச்சடைப்பு நோய்களைக் குணப்படுத்துகிறது.

amphiarthrosis : இயங்கல்குறை.

amphibia : நீர்நில வாழ்வுயிர் : நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.

amphimixis : படலணுக் கலப்பு : பெற்றோரின் பண்புக் கூறுகளின் கலப்பு.