பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transducer

1099

Transiderm...


அல்லது டெஸ்டோஸ்டீரான் போன்ற வெளிப்பூச்சில் நெடு நேரம் செயல்படும் மருந்துகளைப் பயன்படுத்துவது.

transducer : மாற்றமைப்பி : ஒரு அமைப்பிலிருந்து ஆற்றலைப் பெற்று, வேறொரு வடிவில் மற்றொரு அமைப்புக்கு மாற்றிச் செலுத்தும் கருவி.

transduction : மாறிச் செல்லல் : வைரஸ்தொற்றால் மரபுப்பொருள் ஒரு உயிரணுவிலிருந்து மற்று ஒன்றிற்கு மாறிச் செல்லல்.

transection : குறுக்குவெட்டு நீள் ஆழ வெட்டு : ஒரு கட்டமைப்பை குறுக்காக வெட்டுதல்.

transfection : ஊடுதொற்று : கால்சியத்தை முன் சேர்த்த பிறகு அல்லது கோளமுன்னணுக்களாய் மாறிய பிறகு டி.என்.ஏ. தூய்மை நிலையில் நுண்ணுயிர்களை தொற்றுதல்.

transferase : டிராஸ்ஃபெரேஸ் : ஒரு கூட்டுப் பொருளிலிருந்து கரிமத் தொகுதியொன்றை மற்றொன்றுக்கு மாற்றத் தூண்டும் நொதிகளில் ஒன்று.

transferrin : டிரான்ஸ்ஃபெர்ரின் : உடல் முழுவதும் இரத்த ஒட்டம் வழியாக இரும்புப் பொருளை இணைத்து ஏந்திச் செல்லும் குருதி நீர்ம பீட்டா குணபுலின்.

transfer RNA : டிரான்ஸ்ஃபர் ஆர்.என்.ஏ : ஒரு உயிரணுவில் உள்ள குறிப்பிட்ட அமினோ அமிலத்தை எடுத்து மற்ற அமினோ அமிலங்களுடன் சரியான வரிசையில் சேர்த்து ஒரு குறிப்பிட்ட புரதத்தை உருவாக்கும் ஆர்.என்.ஏ மூலக் கூறு.

transfix : ஊடுருவு : ஒரு கூர் முனை கருவி கொண்டு துளைத்தல்.

transfixion : ஊடுருவுகை : உல்ளிருந்து : வெளிப்பக்கத்துக்கு வெட்டிச் செல்லும் கருவி.

transformation : உருமாற்றம் : ஒரு வடிவிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல்.

transfusion : குருதியேற்றம்; மாற்று ஊடுருவித்தல் : காயங் களினால் அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறியவர்களுக்கும், குருதிச்சோகை நோயாளிகளுக்கும், பொருத்தமான குருதிப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்களுடைய இரத்தத்தை நாளங்கள், சிரைகள் மூலம் செலுத்துதல், இதற்கான குருதியை பெறக் குருதி வங்கிகள் உள்ளன.

Transiderm Nitro : டிரான்சிடெர்ம் நைட்ரோ : உடலில் இரத்தத்தின் அளவை ஒரு குறிப்பிட்ட நிலையில் பேணிவருவதற்காகப் பயன்படும் ஒரு மருந்து.