பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transplantation

1102

transvaginal


transplantation : உறுப்பு பொருத்துகை; எலும்பு மச்சை மாற்றம்; அயலுறுப்புப் பொருத்தல்; மாற்று உறுப்பு பொருத்தல் : எலும்பில் உள்ளார்ந்திருக்கும் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச் சோகை நோய்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

transonic : புறவொலி செல்கிற : புறவொலி செல்ல அனுமதிக்கிற.

transport : இடப்பெயர்ப்பு : ஒரு உயிரியல் தொகுதியிலுள்ள பொருள்களை அனுப்புதல்.

transposition : இடப்பெயர்ப்பு : உள்ளுறுப்பு ஒன்று எதிர்ப் பக்கத்துக்கு இடம் பெயர்தல்.

transposon : மரபுப்பொருள் கடத்தி : தனித்தனி நுண்ணுயிர் களுக்கிடையே மரபணுப் பொருளை ஏந்திச் செல்லும் சாதனம்.

transrectal : மலக்குடல் வழி; குத வழி : ஒரு கட்டிக்குள் மலக் குடல் வழியே ஊசி மருந்து செலுத்துதல்.

transsexual : பாலினமாற்று : ஒருவருடைய வெளிஉடற் கூறை எதிர்ப்பாலினத்துக்கு மாற்றல் பாலின மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர்.

transsexualism : பாலினமாற்றம் : பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் எதிர்ப்பாலினத்தைச் சேர்ந்தவரென நிரந்தரமாக நம்பும், பாலின அடையாளக் கோளாறு.

trans-sphenoidal : ஆப்பு எலும்பு வழி : ஆப்பு எலும்பு வழி, தோலடி அறுவை மருத்துவத்துக்கு இந்த வழி பயன் படுத்தப்படுகிறது.

transthoraic : மார்புக்கூட்டுவழி; மார்பக வழி : மார்புக் கூட்டின் குறுக்கே அல்லது வழியே. ஒரு நுரையீரல் தசையில் உயிர்ப் பொருள் ஆய்வு செய்வதற்கு ஊசி செலுத்த இந்த வழி பயன்படுத்தப்படுகிறது.

transudate : உயிரணு நீர்மம்; சவ்வூடு கசிவு : உயிரணுக்களி லிருந்து ஒர் உடல் உட்குழிவுக்குள் அல்லது அதிலிருந்து வெளியில் செல்லும் ஒரு நீர்மம், கசியும் நீர்மம்.

transurethral : புறச் சிறுநீர்க் குழல்வழி : சிறுநீர்ப்புறவழி வழியாக.

transvaginal : யோனிக் குழாய் வழி; யோனிவழி : யோனிக் குழாய் வழியே கருப்பை மலக்குடல் சிறு நீர்ப்பையிலிருந்து நீரை வெளியேற்று வதற்கு துணைவழி செய்யப்படுகிறது.