பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transventricular

traumatology


transventricular : இதயக்கீழறை வழி : நெஞ்சுப் பையில் அறுவை மருத்துவம் செய்வதற்குப் பயன் படுத்தப்படும் இதயக்கீழறை வழி.

transverse foramen : குறுக்குத்துளை : கழுத்து முதுகெலும்பின் குறுக்குத் துருத்தங்களின் ஊடாக, முள்ளத்தமனிகள் செல்வதற்கான கால்வாய்.

transverse myelitis : குறுக்கு மச்சையழற்சி : தண்டுவடத்தின் துண்டங்களில் சிலபலவற்றை பாதிக்கும் தீவிர மச்சையிழப்பு அழற்சிக் கோளாறு உணர்வு மட்டத்தில் குறை தீவிர கீழ் பாதி செயற்குறை.

transvesical : சிறுநீர்ப்பை வழி : சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும்.

transversion : குறுக்காக்கம் : ஒரு பல் மற்றொரு பல் இயல்பாக இருக்கவேண்டிய இடத்தில் முளைத்தல்.

transvestism : மாற்றின உடை வேட்கை : எதிர் இனத்தின் உடையை அணிய அளவுமிருந்து ஆசைப்படும் பாலின உணர்வுப் பிறழ்வு.

trapezium : முரணிணைவகம்; வியனகம்; சாய்வகம் : 1. எந்த இரு பக்கங்களும் இணையாயில்லாத நாற்பக்கத் தள உருவம். 2. மணிக்கட்டு எலும்புகளில் கீழ்வரிசையின் வெளிப் பக்கத்திலுள்ள முதல் எலும்பு பெரு விரலின் உள்ளங்கையெலும் படியுடன் பொருந்துகிறது.

trapezius : முதுகுப்பரப்புத் தசை; சாய்வகத் தசை : கழுத்தின் பின்மேற் பகுதி, தோள்கள், மார்பு ஆகியவற்றை ஒவ்வொரு பக்கமும் மூடும் அகன்ற தட்டைத் தசை.

trapped lung : சிக்கிய நுரையீரல் : சீழ்த் தேக்கத்தால் ஒரளவு சுருங்கிய நிலையில், நுரையீரலின் அழன்ற மடலின் பகுதியும் நுரையீரலுறையும், நுரையீரலை நிலைநிறுத்துதல்.

trauma : காயம் : காயம் அல்லது உடற்சேதம் தீவிர உணர்ச்சித் தாக்கம்.

traumatic : காயம்சார் : படுகாயத்தால் உண்டான.

traumatologist : விபத்துக்காய வல்லுநர்; காய மருத்துவர் : விபத்துக் காயங்களை ஆற்றும் அறுவை மருத்துவ வல்லுநர்.

traumatology : விபத்துக் காயவியல்; காய அறுவை மருத்துவவியல் : விபத்தினால் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தும் அறுவை மருத்துவம்.