பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

triamterene

1105

trichogen


triamterene : டிரையாம்டெரின் : சோடியம் குளோரைடு வெளி யேறுவதை அதிகரிக்கும் நீர்க்கழிவு அதிகரிப்பு மருந்து.

triangular bandage : முக்கோணக் கட்டு : கைகளுக்குத் தொட்டில் போல் கட்டுப் போடுவதற்குப் பயன்படும் காயக்கட்டு முறை.

TRIC : கண் அமரக்கிருமி : 'கண் அமரம்' என்னும் இமையரிப்பு நோய்க் கிருமி.

triceps : முப்புரித்தசை; முத்தலைப்பி : மேற்கையின் பின் புறத்திலுள்ள பெருந்தசை

trichiasis : பம்பை நோய்; இமை மயிர் உள்நோக்கல் : கண்ணிமை மயிர் வரிசை உட்புறமாக அளவுக்கு வளர்தல். இதனால் கண் விழியில் எரிச்சல் உண்டாகும்.

trichinosis (trichiniasis) : இழைப்புழு நோய்; பன்றி தசைப்புழு நோய்; முடமயிர்நோய் : இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

trichloracetic acid : டிரை குளோராசெட்டிக் அமிலம் : ஆற்றல் வாய்ந்த கடுங்காரமுடைய, உறையச் செய்கிற மருந்து. பாலுண்ணிகளுக்கும், நைவுப் புண்களுக்கும் பயன்படுத்தப் படுகிறது.

trichloroethylene : டிரை குளோரோ எத்தலீன் : எளிதில் ஆவி யாகக்கூடிய ஒரு திரவம் நோவுத் தடை மருந்தாகப் பயன்படுகிறது.

trichobezoar : மயிர்ப்பந்து : இரைப்பை அல்லது குடலில் உருவான மயிர்ப்பந்து.

trichogen : கூந்தல் மருந்து : கூந்தல் வளர்க்கும் மருந்து.