பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tuberculous

1112

tularaemia


நோய்க் கிருமியினால் உண்டாகும் நோய் நுரையீரலில் உண்டாகும் காசநோய் "நுரையீரல் காசநோய்" எனப்படும்.

tuberculous : காசநோய்; கழலைப் புற்று நோயுடையவர்.

tuberosis : முண்டுமுடிச் சார்ந்த : சிறுகணுக்கள் வளரும் நிலை யுடன் தொடர்புடையது.

tuberous sclerosis : கழங்குத் தடிப்பு; மூளைத்திசுக் காழ்ப்பு : பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண நிலை.

tuberulostatic : காசநோய்க் கிருமித் தடுப்பு மருந்து : காசநோய் கிருமி வளர்வதைத் தடுக்கும் மருந்து.

tuberous sclerosis : மூளைத் திசுக்காழ்ப்பு; கழங்குத்தடிப்பு : மனக்கோளாறு காரணமாக மூளைத் திசுவில் மரபாக ஏற்படும் அணு உள்ளரிக் காழ்ப்பு. இது காக்காய் வலிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

tuberosity : எலும்புப் புடைப்பு; எலும்புமேடு; மொட்டு; கழங்கு.

tubocurarine : தசை அயர்வுறுத்தும் மருந்து : அரளி போன்ற தென் அமெரிக்கச் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் நச்சு மருந்து. இது அறுவை மருந்தின்போது தசைகளுக்கு அயர்வு உண்டாக்கப் பயன்படுகிறது.

tubo-ovarian : சுவாசக்குழாய்-கருவகம் சார்ந்த; குழல் கருவகம் : சுவாசக் குழாய், சூல் சுரப்பி (கருவகம்) இரண்டும் தொடர்பு உடைய அல்லது உள்ளடங்கிய எ-டு: சுவாசக் குழாய் - கருவகக் கழலை.

tuboplasty : குழல் சீரமைப்பு : அடைபட்ட அல்லது ஒடுங்கிய கருப்பைக் குழலை சரி செய்யும் அறுவை முறை.

túbular necrosis : சிறு நீரக குழாய் இழைம அழுகல் : கடும தீப்புண்கள், தாழ்ந்த குருதிய ழுத்தம், குருதிப் போக்கு, நீர்ம இழப்பு, நசுக்கல் போன்ற நோய்களைத் தொடர்ந்து சிறு நீரகக் குழாய்களில் ஏற்படும் கடும இழைம அழுகல் நோய். இதனால் சிறுநீர் கழியும் அளவு வெகுவாகக் குறைகிறது; சிறுநீரகம் செயலிழப்பதும் ஏற்படுகிறது.

tubule : சிறுகுழாய்; நுண்குழல்.

tularaemia : கொறிக்கும் பிராணிக் காய்ச்சல் :கொறிக்கும் பிராணி