பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tulle gras

1113

turgidity


களைப் பீடிக்கும் ஒருவகைக் கொள்ளைநோய், மான் ஈக் காய்ச்சல், முயல்காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இந்நோய் பீடித்த பிராணிகளைக் கடித்த பூச்சிகள் மனிதரைக் கடிப்பதால் இந்நோய் தொற்றகிறது. நிணநீர்ச்சுரப்பிகள் வற்றி வீங்குதல், கடும் வயிற்றுக் கோளாறு ஆகியவை இதன் அறிகுறிகள்.

tulle gras : வலைத்துகில் : சொரப்புப் பரப்புகளுக்கு சிகிச்சை செய்ய பயன்படும் துணி, நெருங்கிய வலைத்துகில் சதுரத்துண்டுகளாக்கி மென் மெழுகு, பெருபால்சம், காய் கனி எண்ணை தடவப்பட்டது.

tumescene : வீக்கமான; வீங்கிய; விறைப்பு; பொய்ப்புடைப்பு : சிறிதளவு வீக்கம்.

tumidity : புடைப்பு; வீக்கம்.

tumor (turnour) : கழலை; கட்டி; கண்டு : உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். "புற்றுக்கழலை" என்பது மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக் கூடியதாகும். "வெற்றுக் கழலை" என்பது, சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்.

tunicastunic): தசை இழைமம் : உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம்.

tuning fork : ஒலி அதிர்வுக்கவை : ஈரலகுவில்லமைவுடைய குறடு களை தட்டும்போது இசையொலி உண்டாக்கும் கருவி.

tunnel reimplanatation operation : மூத்திரக் கசிவு நாளம் பொருத்துதல்; குழல் குடைவுள் மறுவைப்பு : மூத்திரக் கசிவு நாளத்தை மீண்டும் பொத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவ முறை.

tunnel vision : குழல் காட்சி : நேராக உள்ள பொருட்களை மட்டுமே காண முடியக்கூடிய பார்வைக் கோளாறு. பார்வைப் பரப்புகளில் வட்டக் குறுக்கம் உள்ளது.

turbinal : மூக்குச் சுருள் எலும்பு.

turbinate : சுருள் எலும்பு; தடுப்பெலும்பு; கூம்புச்சுருள் : மூக்கிலுள்ள சுருள்வடிவான எலும்பு. இது முக்கின் இரு புறமும் மூன்று வீதம் அமைந் திருக்கும்.

turbinectomy : மூக்குச் சுருள் எலும்பு அறுவை : மூக்குச் சுருள் எலும்புகளை அகற்றுதல்.

turgeny (turgescence) : வீக்க நிலை : நீர் ஊறிய உயிர்ம இழைம விரிவு வீங்குதல்.

turgidity : வீக்கம்; புடைப்பு : நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற வீக்கம்.