பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tympanoplasty

1115

tyrosinaemia


யான செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் வீக்கம்.

tympanoplasty : இடைச்செவி அறுவை; பறையமைப்பு : கேட்கும் திறனை அதிகரிப்பதற்காக இடைச்செவியைச் சீர்படுத்தும் அறுவை மருத்துவம்.

tympanum : செவிப்பறைச் சவ்வு (இடைச்செவி) : புறச்செவிக்கும் அகச்செவிக்கும் இடைப்பட்ட பகுதி.

type A personality : ‘ஏ' வகை ஆள்மை : போட்டியுணர்வு, அமைதியின்மை, அவசர உணர்வு, பொறுமையின்மையுடன்கூடிய நடத்தையுள்ள ஆள்மை. இதய நாள நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

type B personality : 'பி' வகை ஆள்மை : மிகவும் அமைதியாக வும், மிகவும் தளர்வாகவும், தத்துவ உணர்வுடைய நபர்கள்.

typhlitis : குடல்முளை அழற்சி; பெருங்குடல் நுழைவழற்சி : குடல் முளையில் உண்டாகும் வீக்கம்.

typhoid faver : நச்சுக் காய்ச்சல்; குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) : செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கோடும், நீண்டநாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரியால் விளைவது.

typhomania : நச்சுக் காய்ச்சல் சன்னி.

typhus : ஒரு வகை ஒட்டுண்ணியால் பரவும் சன்னிக் காய்ச்சல் : ரிக்கெட்சியே எனும் நுண்ணுயிரியால் உண்டாகும் ஒரு தொற்று நச்சுக் காய்ச்சல் தோலில் கொப்புளங்களும், கடும் தலைவலியும் உண்டாகும். போர், பஞ்சகாலங்களில் பேன், உண்ணி ஆகியவற்றால் பரவுகிறது.

tyramine : டைராமின் : பல்வேறு உணவுப் பொருள்களில், குறிப்பாக பாலேட்டில் இருக்கும் ஒர் அமின் பொருள். இது அண்ணீரகச் சுரப்பியில் ஊறும் நீரைப் போன்று உடலில் விளைவினை ஏற்படுத்தக்கூடியது.

tyrocidine : நுண்ம நாசினி; கிருமி கொல்லி : நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து.

tyrosinaemia : டைரோசின் குருதி : இரத்தத்தில் டைரோசின் அளவு அதிகரித்தல். சிறுநீரில் டைரோசின் மற்றும் டைரோசில் கூட்டுப்பொருட்கள் வெளியேறுவது அதிகரித்தல். கல்லீரல் மண்ணிரல் பெருக்கம், கல்லீரல் நாராக்கம், சிறுநீரக நுண்குழல் செயலிழப்பு, மற்றும்