பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amylopsin

111

anaemia,nor...


amylopsin : கணையநீர் : மாச்சத்தினைச் சர்க்கரையாக மாற்றும் கணைய நீர் இது. கார ஊடுபொருளில் கரையாத மாச்சத்தினை கரையும் சர்க்கரையாக மாற்றுகிறது.

amylorrhoea : அமிலோரியா : மலத்தில் அளவுக்கு அதிகமாக ஸ்டார்ச் இருக்கும் நிலை.

amylum : அமைலம் : மாச்சத்துப்பொருள்.

amyotonia : தசை முறுக்கிழப்பு.

amytal : அமிட்டால் : 'அமிலோபார்பிட்டோன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

anabolic : உயிர்ப் பொருள் கூட்டமைவுடைய : உயிர்ச்சத்து அடிப்படையில் உயிர்ப் பொருளில் கூட்டமைவு.

anabolic compound : உயிச்சத்துக் கூட்டுப் பொருள் : உடலிலுள்ள புரதத்தை கூட்டிணைவு செய்கிற வேதியியல் பொருள். நோய் நீங்கி உடல் தேறிவரும் காலத்தில் இது பயனுடையதாகும். பல்வேறு ஆண்பால் இயக்கு நீர்மங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

anabolism : உயிர்ப்பொருள் கட்டமைப்பு; வளர்வினை கட்டுமான மிகைவு; வளர்மை : உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல்,

anacatharsis : வாந்தியெடுப்பு.

anacathatic : வாந்தி மருந்து; குமட்டுகிற : வாந்தி எடுக்கத் தூண்டுகிற,.

anacidity : அமிலத்தன்ம யின்மை; அமிலமின்மை : இயல்பு அளவுக்கு அமிலத்தன்மை இல்லாதிருத்தல். முக்கியமாக இரைப்பை நீரில் அமிலத் தன்மை இல்லாதிருத்தல்.

anadrenalism : அட்ரீனல் பணி முழுமையாக இல்லாமை.

anaemia : குருதிச் சோகை; சோகை; வெளிறு : இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்துவம் செய்யப்படுகிறது.

anaemic : சோகையான அயக் குறைச்சோகை.

anaemia, iron deficiency : இரும்புக் குறைச் சோகை.

anaemia, hypocromie : மிகைநிறைச்சோகை; செஞ்சோகை.

anaemia macrocytic : பேரணுச் சோகை.

anaemia, microcytic : சிற்றணுச் சோகை.

anaemia, normocytic : இயல்பணுக்சோகை; அணுவேறுபடாச் சோதனை.