பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uretero...

1127

ureterone...


இருந்து மூத்திரக் கசிவு நாளங்களை அறுவை மருத்துவம் மூலம் பெருங்குடலுடன் பொருத்துதல்.

ureterocystoscope : சிறுநீர்க் குழல் உள்நோக்கி : ஒரு சிறு நீர்க்குழலுள் செலுத்தும் நுண் குழலுடன் கூடிய சிறுநீர்ப்பை உள்நோக்கி.

ureteroenterostomy : சிறுநீர்க்குழல் குடலிணைப்பு : சிறுநீர்க் குழல் மற்றும் குடலை அறுவை மருத்துவம் மூலம் (துளைத்து) இணைத்தல்.

ureterogram : சிறுநீர்க்குழல் கதிர்ப்படம் : கதிர்ப்பட நிறப் பொருளை ஊசி மூலம் செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறு நீர்க்குழலின் கதிர்ப்படம்.

ureterography : சிறுநீர்க்குழல் வரைவு : ஒரு நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறுநீர்க்குழல் கதிர்ப்பட வரைவு.

ureterohydronephrosis : சிறு நீரக சிறுநீர்க்குழல் நீர்வீக்கம் : சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் விரிந்திருத்தல். சிறு நீர்ப்பாதையில் அழற்சி அல்லது திசுவடைப்பு காரணமாக இது ஏற்படக்கூடும்.

ureteroileostomy : மூத்திரக்கசிவு நாள-பின் சிறு குடல் அறுவை.

ureterolith : மூத்திரக்கசிவு நாள அடைப்புக்கல் : மூத்திரக்கசிவு நாளத்தில் கல்லடைப்பு.

ureteroileostomy : சிறுநீர்க்குழல் கடைச் சிறுகுடலிணைப்பு : சிறுநீர்க்குழல் மற்றும் கடைச் சிறுகுடல் வளையங்களுக்கிடையே திறப்பிணைப்பு, வயிற்றுச் சுவரின் ஒருதுளை வாய்வழியே வடிக்கிறது.

ureterolithiasis : சிறுநீர்க்குழல் கல் தோன்றல் : சிறுநீர்க்குழலில் ஒருகல் உருவாதல்.

ureterolithotomy : மூத்திரக்கசிவு நாளக்கல் அறுவை : மூத்திரக்கசிவு நாளத்திலுள்ள ஒரு கல்லை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

uretorolysis : சிறுநீர்க்குழலறிவு : 1. சிறுநீர்க்குழில் பிள்த்தல்; 2. ஒட்டுத்திசுக்களிலிருந்து சிறுநீர்க்குழலை அறுவை முறை மூலம் பிரித்தல், 3. சிறுநீர்க் குழல் செயலிழப்பு.

ureteroneocystostomy : சிறு நீர்க்குழலை மாற்றிட இணைப்பு : சிறுநீர்க்குழலை, சிறுநீர்ப்பையில் மாற்றிடத்தில் வைத்து பதித்தல்.

ureteronephrectomy : சிறுநீரக சிறுநீர்க்குழல் நீக்கம் : சிறுநீரகத் தையும் அதன் சிறுநீர்க்குழலை யும் அறுத்தெடுத்தல்.