பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

valproate

1138

vancomycin


valproate : வால்புரோவேட் தசைச்சுரிப்பு : உடல் முழுவதுமான, இறுக்கத்துடிப்பு, வலிப்பின் முதல் நிலைகளில் பயன் படுத்தப்படும் வலிப்பு மருந்து.

valsalva's manoeuver : உள் தொண்டை பரும அழுத்தம் : தொண்டை அடைப்புக்கு எதிராக வல்லந்தமாக மூச்சு விடும்போது உள்தொண்டையில் ஏற்படும் உச்ச அளவு அழுத்தம், பளுவான பொருள்களைத் தூக்கும் போது இது ஏற்படுகிறது. இந்த முயற்சியின் போது, உள்தொண்டை குறுகுவதுடன், அடிவயிற்றுத் தசையும் சுருங்குகிறது.

valsartan : வால்சார்(ட்)டன் : ஏசியீ தடுப்பிகளைப் போன்ற விளைவுகளைத் தரும் ஆஞ்சியோடென்சின்-2 ஏற்பிஎதிர்ப்பி.

valve : தடுக்கிதழ்; ஊடிதழ்; இதழ் : ஒரு பக்கம் மட்டுமே திறக்கக் கூடிய அடைப்பிதழ். இது சவ்வினால் அமைந்த மடிப்பிதழ்.

valvoplasty : தடுக்கிதழ் ஒட்டமைவு; தடுக்கிதழ் அமைப்பு : ஒரு தடுக்கிதழில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம். பொதுவாக இதயத்திலுள்ள தடுக்கிதழ்களில் இது செய்யப் படுகிறது.

valvotomy : தடுக்கிதழ் அறுவை; தடுக்கிதழ் வெட்டு : இதயம் இயல்பாகச் செயற்படுவதற்காக இதயத் தடுக்கிதழில் அறுவை மருத்துவம் மூலம் துளையிடுதல்.

valvular : தடுக்கிதழ் உருகி : ஒரு தடுக்கிதழ் போன்ற வடிவம் அல்லது இயக்கம் கொண்ட.

valvulitis : தடுக்கிதழ் அழற்சி; இதழ் அழற்சி : இதயத்திலுள்ள ஒரு தடுக்கிதழில் ஏற்படும் வீக்கம். குலையிதழ் அழற்சி.

valvuloplasty : தடுக்கிதழ் வால்வு சீரறுவை : ஒரு குறைபாடுள்ள இதய வால்வை சீர்செய்யும் மறுசீரமைப்பு அறுவை.

vamin : வாமின் : சிரைவழிச் செலுத்துவதற்கான ஒரு மருந்துக் கரைசலின் வணிகப் பெயர்.

vampire : இரத்தக்காட்டேரி; இரத்தம் உறிஞ்சும் வெளவால் : அளவுக்கதிகமான இரத்தசோதனைகளை, இரத்தசோகையை தன்செய்கையில் உண்டாக்குமளவு, செய்யச் செல்லும் சிகிச்சையாளர்.

vancomycin : வாள்கூமைசின் : வட்ட பாக்டீரியா நோய்களைக் குணப்படுத்து வதற்கான நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது சிரை வழி செலுத்தப்படுகிறது. இது, காதில் நச்சுவினை உண்டாக்கக்கூடியது.