anaesthetist
113
anaplasia
விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். (எ-டு) ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால் அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப் படும். பொது அல்லது அனைத்து உறுப்பு மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்து விடுவார்.
anaesthetist : மயக்கமருந்து கொடுப்பவர்; உணர்வகற்றி மருத்துவர்; உணர்வியல் மருத்துவர் : மயக்க மருந்து கொடுப்பதற்கு மருத்துவ முறைப்படி தகுதி பெற்றவர்.
anafranil : அனாஃப்ரானில் : 'குளோமிப்பிராமின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
anagen : முடிவளர் பருவம்.
anal : கழிவாய்.
analeptic : ஊக்க மருந்து; நலமுட்டி: நலமூட்டும் மருந்து; நலிவகற்றி நலமுட்டுகிற மருந்து, காபி, தேயிலைப் பானங்களிலுள்ள 'காபின்' மற்றும் சோர்வகற்றி மருந்துகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
analgesia : நோவின்மை; உணர்ச்சியின்மை; வலியின்மை; வலி உணர்வுக் குறைவு : புலனுணர்வினை மட்டும் இழத்தல்.
analgesic : நோவகற்று மருந்து; வலி நீக்கி; வலி குறைப்பான்; நோவகற்றி : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற மருந்து.
analogous : ஒத்த : தோற்றத்தில் அல்லது செய்கையில் ஒன்று போலிருத்தல்.
analogue : ஒத்த.
analysis : பகுப்பாய்வு : வேதியியலில் ஒரு கூட்டுப்பொருளைத் தனித்தனிப் பொருள்களாக பகுத்து ஆய்வுசெய்தல். உளவியல் பகுப்பாய்வு.
anamnesis : முன் நினைவு : நோயாளியின் மறதியில் ஆழ்ந்து விட்ட பழைய செய்திகளின் மறுநினைவு.
anaphrodisiac : பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து; பாலுணர்வுக் குறைப்பி : பாலுணர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிற மருந்து.
anaphylaxis : அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி; அதிஒவ்வாமை : வெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசி மூலம் செலுத்தப்படும்பொழுது அதன் எதிர்ப்பொருள் உடலில் முன்னரே இருப்பதால் ஏற்படும் தாக்கம் அதிர்ச்சி.
anaplasia : தனிப் பண்பிழந்து பல்கும் வளர்ச்சி; பிரித்துணர் விழப்பு; பிறழ் வளர்ச்சி : ஒர் உயிரணு தனது தனிப்பண்புகளை இழத்தல். புற்றுநோயில் ஏற்படுவது போல் பரவல் நட