பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Vanden Bergh's..

1139

varicography


Vanden Bergh's test : வாண்டன் பெர்க் சோதனை : குருதிவடி நீரிலுள்ள பிலிருபின் அளவை மதிப்பிடுவதற்கான சோதனை. கல்லீரல் மஞ்சட்காமாலையில் நேரடி ஆக்கவினை ஏற்படுகிறது. குருதிச் சிவப்பணு மஞ்சட்காமாலையில் மறைமுக ஆக்கவிளைவு உண்டாகிறது.

Van Gogh syndrome : வேன் காக் நோயியம் தொகுதி : உடல் உருக் கோளாறுகள் திரிபுருவ தவறான நம்பிக்கைகள் ஆகியவையுடன் கூடிய தன் நிலைக்குலைவு.

vanyl mandelic acid : வானில் மாண்டெலிக் அமிலம் : அண்ணீரகச் சுரப்புநீரின் வளர்சிதை வினை மாற்றப் பொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது.

Vaquez's disease : வேக்குவெஜ் நோய் : ஃபிரெஞ்சு மருத்துவர் பெயர் கொண்ட நாட்பட்ட சிகப்பணு மிகைப்பு.

variable : மாறியல்புடைய : நேரத்துக்கு நேரம் மாறுகின்ற, மாறு தலுக்குட்பட்ட மதிப்பெண், நிலையில்லாத புள்ளி விவர இயலில், தனிக்குழுக்களின் குணநலன்களை மதிப்பெண்களில் குறிப்பிடுதல்.

variant : மாற்று (நிலை) : தான் சேர்ந்த வகுப்பின் சில குண நலன்களில் மாறும் இயல்புடைய.

variation : மாறுதல் : தான் சார்ந்த குழுவின் இயல்பில் இருந்து மாறுபட்ட குணங்களைக் கொண்ட ஒருவர்.

variceal : சுருள் விரிநாள : விரி நாளத்தால் உண்டாகும் அல்லது அதன் தொடர்புடைய.

varicella : தட்டம்மை; நீர்கொள்வான் : பயற்றம்மை.

varicella-zoster virus : வேரி செல்லா சாஸ்டர் நச்சுயிர் : தட்டம்மை மற்றும் அக்கி ஆகியவற்றை உண்டாக்கும் அக்கி ஹெர்ப்பீஸ் நச்சுயிர்.

varices : சிரைப்புடைப்பு : நாள அழற்சிக்குட்பட்ட சிரைகள்.

varicocele : நாளப்புடைப்புப்பை; விந்துக் குழாய் சிரைச்சுருள்; சுருள் சிறைப் பிதுக்கம் : விந்துக் குழாய்ச் சிரைகளில் ஏற்படும் புடைப்பு.

varicose ulcer : அழற்சி சிரை நைவுப் புண்; சிரை தளர்ச்சி நைவுப் புண்; சுருள் சிரை நைவுப் புண் : நாள அழற்சிக்குட்பட்ட சிரைகளையுடைய ஒரு காலின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலி தராத நைவுப்புண்.

varicography : எக்ஸ் கதிர்ப்பட : உருக்காட்டு ஊடகம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி விரிசுருள் சிரைகளை எக்ஸ்ரே படம் மூலம் பார்த்தல்.