பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vibrios

1151

vigabatrin


vibrios : வளைவுக்கிருமிகள் : நீந்துவதற்கான ஒரு வாலையுடைய, சலாகைபோல் வளைவான உருவமுடைய பாக்டீரியா காலரா நோய் உண்டாகும் பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது.

vibrissa : மூக்குத் துளை மயிர்; மீசை மயிர்.

wicarious : பதிலியக்கம் : ஒர் உறுப்பின் செயலை இன்னொரு உறுப்பு செய்தல், எ-டு: மாத விடாய்க் குருதிப்போக்கின் போது இயற்கைக்கு மாறாக மூக்கின் அல்லது உடலின் வேறொரு உறுப்பின் வழியேயும் இரத்தம் வெளியேறுதல்.

Victor Horsley's sign : விக்டர் ஹார்ஸ்லி அறிகுறி : பின் கபாலக் குழிவு முறிவில், நடுமூளையுறைக் குருதியொழுக்கு முற்றிய நிலையில், ஒவ்வொரு பக்க அக்குளின் வெப்பநிலையை எடுக்கும்போது, செயலிழந்து பக்க வெப்ப நிலை அதிகமாய் இருத்தல். இந்த அறிகுறி பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் சர்விக்டர் ஹார்ஸ்லீயின் பெயர் கொண்டது.

victuals: உணவுப் பொருள்கள்.

video-game epilepsy : வீடியோ ஆட்ட வலிப்பு : ஒளி தாங்கா வலிப்பு நோய்.

videognosis : காண் ஒளிப்பட காட்சியறிவு : தொலைக்காட்சி மூலம் கடத்தப்படும் உருவங்கள் மற்றும் தரவுகள் கொண்டு நோயறிதல்.

viderabine : விடெரபைன் : ஹெர்ப்பிஸ் சிம்ப்ளெக்ஸ் மற்றும் ஹெர்ப்பிஸ் சாஸ்டர் மற்றும் தட்டம் மைக்குள எதிரான வைரஸ் எதிர்ப்பு மருந்து.

Vidian nerve : விடியன் நரம்பு : ஃபிரெஞ்சு நரம்பியலாளர் கிரி டோவிடியஸ் பெயர் கொண்ட நாசிச்சீதச்சவ்வுக்கு நாளவியக்க நரம்பு வழங்கல்.

view box : காட்சிப் பெட்டி : ஒரு சீரான ஒளி மூலம் கொண்ட பெட்டி, கதிர்ப்படத்தைக் காணப் பயன்படுவது.

vigabatrin : விகாபேட்ரின் : குழந்தைப் பருவகரிப்பு மற்றும்