பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vigilance

1152

vincristine


ஒரளவு வருநிலைபொதுவான இறுக்கத்துடிப்பு வலிப்புகளில் பயன்படும் வலிப்பு எதிர்ப்பு மருந்து.

vigilance : விழிப்புடனிருத்தல் : கேட்டல், பார்த்தல் போன்ற ஒருவரையிடப்பட்ட தன்மையிலான், மிதமான உணர்வுத் தூண்டல்களை, கவனத்தை திருப்பும் உள், வெளித்துண்டல்களை கழித்து விட்டு, உணர்வு மற்றும் அரை உணர்வு நிலையில் குறித்தொடர்ந்த கவனத்தில் கொள்ளல்.

village health guide : கிராம(சுகாதார)வழிகாட்டி : முழுநேர அரசுப் பணியாளரல்லாத, சமூகசேவையில் ஈடுபாடு கொண்ட ஒருவர்.

villaret syndrome : வில்லாரெட் நோயியம் : இடம் பெயர் புற்றுத் துகள், முளையுறைப்புற்று, கழுத்துத் தடமிக்கூறு கழுத்துத் தமனிக்கருகில்பின் தொண்டைபின் வெளியிலுள்ள கழுத்து உடலக்கட்டி ஆகியவற்றால் 9, 10, 11, 12 ஆகிய கீழ்க் (கபால) மண்டை நரம்புகள் செயலிழப்பும் ஹார்னர் நோயியமும் சேர்ந்தநிலை, ஃபிரெஞ்சு நரம்பி யலாளர் மாரிஸ் வில்லாரெட் பெயர் கொண்டது.

villus : குடற்பிசிறு; குடல் விரலி; குடல்இழை : குடற்சளிச்சவ்வின் மேலுள்ள சிறு மயிர் போன்ற உறுப்புகள்.

vinaigrette : முகர்வுக்குப்பி : முகர்ந்து பயன்படுத்தக்கூடிய மருந்து நெடியுடைய புட்டி.

vinblastine : வின்பிலாஸ்டின் : பிளவியக்கக்கதிரின் நுண்குழல் களை பாதித்து வேகமாகப் பிளக்கும் உயிரணுக்களை அழிக்கும் வேதிய மருத்துவ காரகப் பொருள் ஹாட்ஜ்கின் சோய், வெள்ளணுப்புற்று மற்றும் வேறு நிணப்பெருக்கக் கோளாறுகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

vinca alkaloids : வின்கா காரப்பொருள் : வின்கா ரோசியாவிலிருந்து பெறப்படும் புற்றெதிர் காரகப்பொருள். அவை பிளவியக்கக் கதிர்களின் மேல் செயல்படுகின்றன.

Vincent's angina : வின்சென்ட் வாயழற்சி : வாய் நலம் கெடும் போது, திக வழிப்புண் ஈறு அழற்சி ஏற்படுதல். ஃபிரெஞ்சு மருத்துவர் ஹென்ரிவின்சென்ட் பெயர் கொண்டது.

vincristine : விங்கிரிஸ்டின் : குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்கு (வெண்புற்று) எதிராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ் செடியிலிருந்து எடுக்கப்