பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viscid

1155

vitamin-B


viscid : ஒட்டு இயல்பு : ஒட்டும் இயல்புடைய, நெய்ப்புத் தன்மையுடைய எ-டு: இருமல் நோய்ச்சளி.

viscidity : ஒட்டுத்தன்மை : ஒட்டும் இயல்பு நெய்ப்பு.

visclair : விஸ்கிளேர் : இருமல் சளியின் பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மெத்தில்சிஸ்டைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vision : பார்வை : காட்சி, கண்களைக்கொண்டு உணரும் சக்தி.

visual : காட்சிப்பொருள்; பார்வையில் : கண்ணுக்குப் புலப்பொருள்.

vital capacity : உயிர்ப்புத் திறன்; மூச்சு இழுப்புத்திறன்; உயிரியக் கொள்ளடக்கம் : முழுமையாக மூச்சை இழுத்து வெளியிடும் போது வெளியேறும் காற்றின் அளவு.

vitallium : வைட்டாலியம் : திசுக்களில் எஞ்சியிருக்கும் ஒர் உலோகக் கலவை. இது நகங்கள், தகடுகள், குழாய்கள் போன்ற வடிவில் இருக்கும்.

vitalograph : உயிர்ப்புத்திறன் அளவி : கட்டாய உயிர்ப்புத் திறனை அளவிடுவதற்கான கருவி.

vitalometer : உயிர்ப்புமானி : மூச்சிழுப்புத் திறனை அளக்கும் கருவி.

vitals : உயிர்நிலை உள்ளுறுப்புகள் : நெஞ்சுப்பை, மூளை போன்ற உயிர்ப்புறுப்புகளின் தொகுதி.

vitamins : ஊட்டச் சத்துகள்(வைட்டமின்கள்); உயிர்ச்சத்துகள் : உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்பம் கரிமப்பொருள்கள்.

vitamin A : வைட்டமின்-ஏ : நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இது 'ரெட்டினால்' என்ற பொருளாக மாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தோல், சளிச்சவ்வு ஆகியவற்றுக்கு இன்றியமையாதது. இது கண்பார்வையைக் கூர்மையாக்குகிறது. இதன் பற்றாக் குறையினால், உடல் வளர்ச்சி குன்றும்; இரவுக்குருடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளில் பார்வைக் குறைநோய்க்கு இதன் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம.

vitamin-B : வைட்டமின்-பி : தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் தொகுதிகளில் ஒன்று.