பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

valnerability

1159

V wave


நீரிலுள்ள காரணி VIII புரதங்கள் தொடர்பான பற்றாக் குறைகள் காரணமாக உண்டாகும் ஒரு மரபுவழிக் குருதிப் போக்கு நோய். இது இனக்கீற்று ஆதிக் கப் பண்பு சார்ந்தது. இது இரு பாலாருக்கும் உண்டாகும்.

valnerability : நோய்த் தொற்றக் கூடிய; காயமுண்டாக்கும்.

Voorhee's bag : ஊர்ஹீஸ் பை : பிள்ளை பிறப்பைத் தூண்டி நிகழ உதவு, கருப்பைக் கழுத்தை விரிக்கும், ஊதிப்பெருக்கக் கூடிய ரப்பர்பை. அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ஊர்ஹீஸ் பெயர் கொண்டது.

Vortex : சுழலமைப்பு : சுழல் அமைப்பு முறை.

vorticose : சுழற்சி வாய்ந்த : கண்களின் குருதிப் படலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் குருதிபெறும் நான்கு சிரைகளில் ஒன்று.

voyeurism : பிறழ்பாலுணர்வு : மற்றவரது நிர்வாண செயல்களைப் பார்ப்பதனால் பெறும் பாலுணர்வுக் கிளர்ச்சி திருப்தி.

vulnerant : காயமாக்கி; காய முண்டாக்கும்.

vulva : குய்யம் : பெண்பால் கரு வாய். பெண்ணின் புறப்பிறப் புறுப்பு.

vulvar : பெண்பாற் கருவாய் சார்ந்த.

vulvate : பெண்பாற் கருவாய்க் குறிய.

vulsella : உல் செல்லா : ஒவ்வொரு வெட்டுப் பகுதியின் முனையிலும் வளை நகம் போன்ற கொக்கிகள் கொண்ட பற்றுக் குறடு.

vulvectomy : குய்ய அறுவை : பெண்ணின் புறப்பிறப்புறுப்பை (கருவாய்) வெட்டியெடுத்தல்.

vulviform : பெண்பாற் கருவாய் வடிவான.

vulvitis : அல்குல்அழற்சி : வயது முதிர்வு, ஒவ்வாமை விளைவு, தொற்று ஆகியவற்றால் உண்டாகும் அல்குல் அழற்சி.

vulvitis : குய்ய அழற்சி (கருவாய் அழற்சி) : பெண்ணின் புறப் பிறப்புறுப்பில் (கருவாய்) ஏற்படும் வீக்கம்.

vulvo vaginoplasty : குய்யம்-யோனிக்குழாய் அறுவை : பிறவியில் யோனிக் குழாய் இல்லாதிருப்பதைச் சீர்செய்வதற்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

vulvovaginitis : அல்குல்யோனியழற்சி  : தொற்றால் அல்குல் மற்றும் யோனியின் அழற்சி.

V wave : வி அலை : இதய மேறைவிரிவின்போது இயல்பான கழுத்துச் சிரைத் துடிப்புகளின் அலை.