பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

W

 Waardenburg syndrome : வார் டென்பர்க் நோயியம் : டச்சு நாட்டு கண் மருத்துவர் பெயராலமைந்த மரபணுக் கோளாறு. அகன்ற முக்கு, தலைமுடி முன் பகுதி வெளுத்திருத்தல், இரண்டு கண் புருவங்களும் ஒன்றாக வளர்தல், வெளுத்த கண்ணிமை மயிர்கள், உள் கண் கோணம் வெளித்தள்ளியிருத்தல், தோல்நிறம் குறைந்திருத்தல், காது கேளாமை ஆகியவை குறிப்பான தன்மைகளாகும்.

waddling : வாத்துநடை : எலும்பு நலிவுநோய், பொய்மிகை வளர்ச்சித் தசைவழு, இருபக்க இடுப்பு (முட்டு)விலகல், நிறை மாத கர்ப்பம் ஆகியவற்றில் காணப்படும் வாத்து போன்று இடுப்பை உயர்த்தி, ஆடி அசைந்து குறுநடை நடத்தல்.

wafer : உலர்பசைவில்லை : தூள் வடிவ மருந்தை உள்ளிடம் பயன்படும் ஒரு மெல்லிய தாள் போன்ற மாவுப்பசை; ஒரு தட்டையான யோனியுட் செருகு குளிகை.

Wagner-Jauregg treatment : வேக்னெர்-ஜாரெக் மருத்துவம் : ஆஸ்திரிய மன நரம்பு மனநோய் மருத்துவரான வேகனர் வான்ஜாரெக் விளக்கிய மருத்துவ முறையில், (மலேரியா மலைக் காய்ச்சல்) நோயாளிக்கு தொற்ற வைத்து, வாத மனக்குறை நோய்க்கு மருத்துவமளித்தல்

Wagner-Meissner corpuscle : வேக்னர்-மெய்ஸ்னெர் நரம்பு முனை : ஜெர்மன் உடலியங்கியலார் ரூடால்ஃப்வேக்னர் மற்றும் ஜெர்மன் உடற்கூறியலாளர் ஜார்ஜ் மெய்ஸ்னர் பெயராலமைந்த, ஒரு (தனி) நரம்பிழையுடன், இணைந்த, சிறு சிறப்பு அழுத்தவுணர், உணர்வு பிரிமுனை.

Wagstaffe's fracture : வேக்ஸ்டாஃப் முறிவு : பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் வில்லியம் வேக்ஸ்டாஃப் பெயர் கொண்ட கணுக்காலின் உள்கணு வெலும்பு பிரிந்துள்ள எலும்பு முறிவு.

waist : இடுப்பு.

waist-to-hip girth ratio : இடை இடுப்பெலும்பு சுற்றளவு வீதம் : ஒரு அளக்கும் நாடாகொண்டு, இடை மற்றும் இடுப்புச் சுற்றளவை அளப்பது, உடற்