பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

waiting list

1161

walking


கொழுப்பு படிந்துள்ளதை அளவிட உதவுகிறது. இந்த இடை-இடுப்பு வீதம் ஆண்களில் ஒன்றுக்கு மேலும் பெண்களில் 0.8-க்கு மேலுமிருந்தால் இதயக் குருதிக் குறைநோய் ஆபத்து அதிக மாயிருக்கும்.

waiting list : காத்திருப்போர் பட்டியல் : மருத்துவமனையில் உரிய பிரிவில் மருத்துவத்துக்காகச் சேர்க்கப்படுவதற்குக் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல்.

wakefulness : விழிப்புநிலை : ஏறு வலை செயலூக்க தொகுதி மூலமாக, எழுப்பப்படும் தன்மை.

Walcher's position : வால்செர் இருக்கைநிலை : ஜெர்மன் மகளிர் நோயியலாளர் ஜெர்மன் வால்செர் விளக்கிய நிலை (படுக்கை) கட்டிலின் முனையில் கால்களைத் தொங்கப் போட்டு முதுகைக் கிடத்தி உள்ள நிலை.

Waldenstrom's disease : வால் டென்ஸ்ட்ராம் நோய் : ஸ்வீடன் நாட்டு முடநீக்கியல் அறுவை மருத்துவர் ஜோஹன் வால் டென்ஸ்ட்ராம் விவரித்த இளம் பருவ உருக்குறை எலும்புக் குருத்தழற்சி.

Waldenstrom's macroglobulin -aemia : வால்டென்ஸ் ட்ராம் பெரும் குளோபுலின் (புரத) குருதிச்சோகை : நிணஅணுக்கள் மற்றும் ஊநீரணுக்களின் கலப்பினம் போல் தோன்றும் பீட்டா அணுக்களின் கொடும் புற்று. இவ்வணுக்கள் சிறப்புத் தன்மை 1gM பரபுரதம் சுரப்ப தால் (குருதியணு) மிகை ஒட்டு நோயியமாக வெளிப்படுவதை, ஊநீர்ப் பிரிப்பு முறையில் மருத்துவம் செய்தல்.

Waldeyer's gland : வால்டேயர் சுரப்பி : ஜெர்மன் உடற்கூறியலார் வில்ஹெல்ம் வால்டேயர் விவரித்த, கீழ் விழியிமை ஒரத்தில் முக்கியமாக உள்ள விழியிமை வியர்வைச் சுரப்பிகள்.

Waldeyer's ring : வால்டேயர் வளையம் : தொண்டையைச் சுற்றியுள்ள நிணநீர் வளையம்.

walk: நடை : காலடிகளை மாற்றியெடுத்து வைத்து நகருதல். ஒருவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நகருதல்.

walker : நடையன் : ஒருவர் நடப்பதற்கு உதவும் நகரும் கருவி. ஒரு நிலையான மெல்லெடை உலோகக் குழல்களாலான நடைமேடை கைகளால் பற்றிக் கொண்டு அடியெடுத்து வைக்க ஆதரவாகப் பயன்படுவது.

walking : நடத்தல் : காலடி கொண்டு அசையும் செயல்.