பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wasserman......

1165

water hammer


wasserman test (wasserman reaction) : மேகக் கிரந்தி நோய்ச் சோதனை : ஒருவர் கிரந்தி என்னும் மேகப் புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் ஒருவகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவிபுரியக்கூடிய 'இணைப் பான்' என்னும் பொருள் அடங்கியிருக்கிறது. ஒரு நச்சுப் பொருள் அதாவது, ஆ என்ற வேறொரு பிராணியின் இரத்தம் 'அ' என்ற பிராணியின் இரத்தத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரத்தம்) தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுடன் கலக்க வேண்டும். இணைப் பானுடன் நச்சுப்பொருள் கலந் திருந்தால் நச்சு அ வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ'வின் குருதியை மேகக் கிரந்தி பீடித்திருக்குமானால், 'ஆ நச்சு கலப்பதற்கு முன்பு 'அ' இரத்த இணைப்பானுடன் இணைந்துவிடும். அப்போது, 'ஆ' நச்சு கலப்பதற்கு இணைப்பான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால், 'ஆ' நச்சு, 'அ' குருதியின் உயிரணுக்கள் சேதமடையாமல் இருக்கும் இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

waste : கழிவு : அழுகிய பயனற்ற பொருள், உடல் தேய்தல், உடலிளைத்தல்.

wasted ventilation : வீணாகும் மூச்சூட்டம் : மூச்சுப் பாயிைன் உடலியக்க வெற்று வெளியை மூச்சூட்டும் காற்றின் கொள்ளளவு.

wasting : மெலியச்செய்தல்; இளைத்தல் : உடல்கனம், பலம் சுருங்குதல்.

water-borne : நீரால் பரவும் : மாசடைந்த குடிநீரால் பரவும்.

water carriage system : நீர் கொண்டு செல்லும் அமைப்பு : மனிதக் கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை, குடியிருப்பு, வணிக, தொழிற்சாலைப் பகுதிகளிலிருந்து தரைடியக் குழாய் வலையமைப்பு மூலம், இறுதியாக கழிக்குமிடத்திற்கு சேர்த்துக் கொண்டு செல்லும் கழிவு நீரமைப்பு.

water-cell : நீர்அணு : தெளிவான, பெரிய, கிளைக்கோஜன் நிறைந்து தைராயிடு பக்கச் சுரப்பி முதன்மையணு.

water hammer : நீர் சுத்தி : பாதிநீரால் நிறைந்த வெற்றிடம் கொண்ட காற்றுப்புகாமல் முடப்பட்ட குழாய். குழாயை வேகமாக கவிழ்க்கும்போது, நீர் உடனடியாகக் கொட்டி, கொள்கலத்தின் முனையில்