பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Westphal's sign

1171

whiplash injury


Westphal's sign : வெஸ்ட்ஃபால் குறி : ஜெர்மன் நரம்பியல் மருத் துவர் கார்ல் வெஸ்ட்ஃபால் பெயரில் கொண்ட குறி. தண்டு வட முதுகுப் பகுதி பாதிப்பில், முழங்கால் உதறல் (சோதனையில் உதறல்) இருக்காது.

web nurse : முலைத்தாய்; பாலூட்டும் செவிலித்தாய்.

Wharton's duct : வார்ட்டன் நாளம் : கீழ்த்தாடையடி உமிழ்நீர் சுரப்பி நாளம் நாபின் இழுமடிக்குப் பக்கத்தில் திறக்கிறது. இந்த நாளம் பிரிட்டிஷ் உடற் கூறியலாளர் தாமஸ் வார்ட்டன் பெயர் கொண்டது.

Wharton's jelly : வார்ட்டன் பாகு; தொப்புள் கூழ் : தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒரு ஊன் பசைப்பொருள் நிறைந்துள்ளது.

wheat : செந்தடிப்பு : ஒரு மெதுவான, சிறிது மேடான, பக்கத் தோலைவிட சிவந்து, வெளுத்து அரிப்புடன் கூடிய தோலில் காணப்படும் அரிப்புத் தோல் நோய்.

wheeze : ஊசுமூச்சு : பொதுவான மூச்சுப் பாதை அடைப்பு நோயாளிகளில் கேட்கும் தொடர்ந்து அதிக தொனியுடன் கூடிய, விசில் போன்ற ஒலி.

welk : பரு : முகத்தில் ஏற்படும் முகப்பரு.

whey : உறைபால் தெளிவு : பாலிலிருந்து தயிரையும் பாலேட்டையும் பிரித்த பிறகு மீதமிருக்கும் நீர்த்த(திரவம்) பாய்மம்.

Whichmann's asthma : விச்மான் ஆஸ்த்மா : ஜெர்மன் மருத்துவர் ஜோஹன் விச்மான் பெயர் கொண்ட குரல்வளை மூச்சுத் திணறலோசை.

whiplash injury : சவுக்கடிக் காயம் : உடல் மிக வேகமாக அல்லது விரைவாக வேகம் தணியும் போது சாட்டையின் கைப்பிடி போல் கீழ்மூன்று கழுத்து முன்னெலும்புகளும் அதன் சவுக்குப்பகுதி போல் மேல் நான்கு கழுத்து முள்ளெலும்புகளும் செயல்படுவதால், முதுகெலும்புத் தண்டின் நான்காவது ஐந்தாவது கழுத்து முள்ளெலும்புகள் சந்திக்குமிடத்தில் ஏற்படும் காயம். இது மாதிரி காயங்கள் கால்பந்து விளையாடுபவர்களிலும் ஆட்டோவின் பின் பகுதி