பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wiring

1176

Wolman's disease


wiring : கம்பிக்கட்டு : அறுவை மருத்துவத்திலும், பல் சிகிச்சையி லும் கம்பி கொண்டு நிலை நிறுத்தல்.

Wirsung's duct : வர்சங் நாளம் : ஜெர்மன் மருத்தவர் ஜோகன் வர்சங் பெயர் கொண்ட கணைய நாளம்.

wisdom tooth : கடைவாய்ப் பல் : 18 முதல் 25 வயதுக்குள் முளைக்கும் மேல் மற்றும் கீழ் தாடையின் இருபக்கத்திலும் உள்ள கடைவாய்ப் பற்கள்.

witch doctor : பில்லி சூனிய மருத்துவர் : மாயவித்தையைக் கொண்டு, கெட்ட சக்திகளை விரட்ட, நோயை குணமாக்க முயலும் சில ஆதிகுடிகளில் ஒரு மனிதர்.

witches' milk : சீம்பால் : தாயின் இரத்தத்தில் ஹார்மோன்களால் செயலால் உருவாகும் பிறந்த குழந்தை முதலில் உண்ணும் தாய்ப்பால்.

withdrawal : விலக்கல் : இயக்க அல்லது நோய் காரணமான மது, போதை மருந்து அடிமைகளில் மருந்தை உட்செலுத்துவதை நிறுத்துதல்.

withdrawn behaviour : விலக்க நடத்தை : உணர்ச்சி மழுங்கல் மற்றும் சமுதாய உணர்வுநிலை குறைந்துள்ள நிலை.

witkop's disease : விட்காப் நோய் : வாய்சீதச்சவ்வு பரவலாக வெளுத்துத் தடித்தும், விழிக்கோள இமையிணைப் படலத்தில் ஊன்பசைத் தடிப்புகள்.

witness : சாட்சி : ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் போது உண்மையில் அங்கிருந்த ஒருவர்.

Witzel's operation : விட்செல் அறுவை : ஒரு ஜெர்மன் அறுவை மருத்துவர் பெயர் கொண்ட, இரைப்பைத் துளை அறுவை.

Wolff-Chaikoff phenomenon : ஒல்ஃப்-சைக்கோஃப் விளைவு : இயல்பான மனிதர்களில் சுமார் இரண்டு மில்லிகிராம் அயோடின் உட்செலுத்துவதால் தைராயிடு ஹார்மோன் சுரப்பைத் தடுக்கும் விளைவு.

Wolffian body : ஒல்ஃபியன்மெய்மம் : ஜெர்மன் உடற்கூறியலாளர் காஸ்பர்வுல்ஃ விவரித்த இடை நீரகத் திசு.

Wolman's disease : ஒல்மேன் வியாதி : இஸ்ரேல் மருத்துவர் மோஷே ஒல்மேன் பெயர் கொண்ட, மரபு வழியாகப் பெற்ற பரம்பரையால் வந்த வளர் சிதை மாற்றக் கோளாறு. இதில் குழந்தைகளில் கல்லீரல் மண்ணீரல் பெருக்கமும் அட்ரீனல் சுரப்பியில் கால்சியம் படிதலும் எலும்பு மச்சையில் துரையனுக்கள் உள்ளன.