பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

woman

1177

word salad


woman : பெண் : ஆளான ஒரு மனிதப்பெண். பெண் ஆண்டு : பாலின நிலையால் பெண்ணின் குழந்தை பெறும் பருவத்தில் ஒரு ஆண்டு.

womb : சூழ்பை; கருப்பை.

wonder drug : அதிசய மருந்து : வழக்கமாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு , அதிசயிக்கத்தக்க குணமாக்கும் விளைவைத் தரும் மருந்து அற்புதமருந்து.

Woolsorter's disease : 5lb Lof கையாள்வோர் : ஆன்த்ராக்ஸ் கிருமியின் கருமூலத்தை உள்ளிழுப்பதன் மூலம் உண்டாகும் உயிராபத்தான முழு உடல் பாதித்த ஆன்த்ராக்ஸ் நோயில் நீலம்பாரித்து, மூச்சுத்திணறல், நடுமார்பு அழற்சி, சளியில் இரத்தம் வரும்நிலை.

Woodman's disease : உட்மேன் நோய் : கருவாலி மற்றும் பசு மரங்களின் பெனிசிலியம் வகைகளை உள்ளிழுப்பதன் மூலம் ஏற்படும், வெளி ஒவ்வாமையால் நுண்காற்றறை அழற்சி.

Woodworker's lung : மரவேலையாளரின் நுரையீரல் : சீமை ஆலம், தேவதாரு, சீமைநூக்கு மரத்துசியை உள்ளிழுப்பதால் ஏற்படும் வெளி ஒவ்வாமையால் நுண்காற்றறை அழற்சி.

woody legs : மரக்கால்கள் : ஆளானவர்களில் வைட்டமின் குறையால், தொடைகளிலும் கால்களிலும் ஆழ்திசுக்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு அவை இறுகித் தடித்திருத்தல்.

word blindness : சொற் குருடு : பின் (பெரு) மூளைத் தமனி வழங்கும் பகுதியில் (குருதிக் குறை) தசையழிவு கட்டி அல்லது இரத்த ஒழுக்க காரணமாக எழுதப்பட்ட சொற்களைப் புரிந்து கொள்ள முடியாமை. பார்வைப் பேச்சிழப்பு (சொற் குருடு) வாசிக்க இயலாமை.

word deafness : சொற் செவிடு : சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி அல்லது குருதிக் குறைவு திசுவழிவு மேல் பொட்டு மூளை மடிப்பை பாதித்ததால் ஏற்படும், செவிப் புலனுணர்வு பாதிப்பு, ஒரு வாக்கியத்தை திரும்பச் சொல்ல முடியாமை அல்லது, ஒரு வாசிப்பைக் கேட்டு எழுத முடியாமை, கேட்புப்பேச்சிழப்பு.

word salad : சொற் கலவை (முரணமூளைநோய்) : மனச் சிதைவு நோயில் போல் சொல் தொகுதி அல்லது சொற்கலவை.