பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

work

wrinkle


பொருத்த மில்லாமல் பயன் படுத்துவது.

work : வேலை : ஒரு தடையை அகற்றும் ஆற்றல், வாழ்க்கைத் தொழில், பணி.

workman's compensation : தொழிலாளர் இழப்பீடு : தொழிலக நோய்கள் அல்லது காயங்களால் பாதிக்கப்பட்ட, தொழிலாளர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போருக்கும் மருத்துவ கவனிப்பு, சம்பத் இழப்பீடு தரவகை செய்யும் ஒருவகை காப்பீடு.

work-up : விவரம் பெறுதல் : நோயின் நோயறிந்து, குணப்படுத்த ஒரு நோயாளி எல்லா பொருத்தமான செய்திகளையும் பெறும் செய்முறை.

World Health Organisation, WHO : உலக சுகாதார நலவாழ்வு நிறுவனம் : உலகிலுள்ள எல்லா மக்களும் உயிர்நிலை நல வாழ்வை அடைய வேண்டுமென்ற குறிக்கோள் கொண்ட, ஜெனிவாவில் தலைமையிடம் கொண்ட, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஒரு பன்னாட்டு நாடுகளுக்கிடையேயான நிறுவனம்.

worm : புழு : ஒரு நீண்ட, தட்டையான, உருண்ட அல்லது துண்டுகளுடைய, முதுகெலும்புப் பிராணி, குடற்புழு.

wormian bones : வோர்மியன் எலும்புகள் : டேனிஷ் நாட்டு ஒலாஸ் வோர்மியன் உடற்கூறியலாளர் விவரித்த, மண்டையெலும்புத் தையல்களில் உள்ள சிறு ஒழுங்கற்ற எலும்புகள்.

worthlessness : மதிப்பில்லாத : பயனில்லாதவர் என்ற உணர்வுகள் கொண்டு, மிகத்தாழ்வு மனப்பான்மையின் ஒரு பகுதி.

wound : வெட்டுக்காயம்; காயம் : வெட்டு, கத்திக்குத்து போன்ற வற்றால் தோலில் அல்லது உள் திசுக்களில் ஏற்படும் காயம். வேதியியல் பொருள்கள் உராய்வு, வெப்பம், அழுத்தம், கதிர்கள் காரணமாகத் தோலில் உண்டாகும் காயங்களை இது உள்ளடக்கும்.

wound healing : காயம் ஆற்றுதல் : சீழ்வைத்த காயங்களை ஆற்றும் இயக்கம்.

Wright's stain : ரைட் சாயம் : அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜேம்ஸ் ரைட் அறிமுகப்படுத்திய மலேரிய ஒட்டுண்ணிகள் மற் றும் இரத்த அணுக்களை கண்டறிய பயன்படும், இயோசின் மற்றும் மெதிலீன் நீலம் கொண்ட சாயம்.

wrinkle : தோல் சுருக்கம் : வயதின் காரணமாக ஏற்படுவதைப் போன்ற, மடிப்பு அல்லது