பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

angina of effort

117

angiogram ; ang...


நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பயிற்சியினால் இந்த தாக்குதல் துாண்டப்படுகிறது.

angina of effort : இயக்க நெஞ்சு வலி; இயக்க நெரிப்பு.

anginapectoria : இடது மார்பு (வேதனை தரும்) இதயநோய்.

angina pectoris : இதயக் குத்தல்; இடது மார்பு வலி : இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனைதரும் கடும் இதயவலி.

angloblast : இரத்த நாளக்கோளம் : இரத்த நாளம் உருவாவதற்கு உறுதுணை செய்யும் ஒர் உடலணு.

angiocarditis : இதய இரத்த நாள அழற்சி : இதயமும் அதைச் சார்ந்த இரத்த நாளங்களும் அழற்சி ஏற்படுதல்.

angiogenesis : கருவில் இரத்த நாளம் உருவாவது.

angiocardiography : இதய இயக்கம் காட்டும் கருவி : ஒளி ஊடுருவாத ஓர் ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்திய பின்பு இதய அறைகளையும், பெருங்குருதி நாளங்களையும் கண் கூடாகக் காட்டும் கருவி.

angiogenic : (1) இரத்த நாளம் உருவாவது தொடர்பான. 2 இரத்த நாளம் உருவிடம்.

angiogram ; angiography : இதய அழுத்தப் பதிவு; குழல் வரைவியல் : இதய அழுத்தத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு பரிசோதனை முறை. இதயத்தில் நடத்தப்படும் இப்பரிசோதனை மூலம் எந்த விதமான இதயச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறிய குழாயை (Catheter) துடையின் முதன்மைத் தமனி அல்லது மூச்சுக் குழாய்த் தமனி வழியே செலுத்தி அதன் மூலம் இதய இயக்கத்தைப் பதிவு செய்கிறார்கள். ஒரு தனிவகைத் திரவம் தமனியினுள் செலுத்தப் பட்டு, முக்கியப் பகுதிகள் ஆராயப்பட்டு உடனுக்குடன் படமும் எடுக்கப்படுகிறது. இது முடிந்ததும் அந்தக் குழாய் எடுக்கப்பட்டு அங்கே நேரான அழுத்தம் மூலம் 15-30 நிமிடம் வரை குருதிக்கசிவை நிறுத்துவதற்காக அழுத்தப்பட வேண்டும். இந்தப் பரிசோதனை முடிந்த அன்றே கூட வீட்டுக்கு சென்று விடலாம். இந்தப் பரிசோதனை செய்து கொள்வதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய மூன்று இன்றியமையாத நிபந்தனைகள்: 1. பரிசோதனைக்கு முந்திய நாள் இரவுக்குமேல் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.