பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x-ray

1185

xylose test


x-ray : ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) : காமா கதிர்கள் போன்று மிகவும் ஊடுருவும் திறன் கொண்ட கதிர். இது அணுக்கருவிலிருந்து வருவது இல்லை. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருகிறது. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் இது உண்டாகிறது. இக்கதிர் பெரும்பாலான பொருட்களை ஊடுருவிச் செல்கிறது. இதன் மூலம் எலும்புகளின் உள் உறுப்புகளின் நிழல்களைப் பார்க்கவும், படம்பிடிக்கவும் முடியும்.

x-ray examination : ஊடுகதிர்ச் சோதனை : ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் கூராய்வு செய்தல்.

x-ray photograph : ஊடுகதிர் ஒளிப்படம் : எலும்பு முதலியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் ஒளிப்படம் எடுத்தல்.

x-rays short wavelength : ஊடு கதிர்ச் சிற்றலை நீளம் : மின்னியல் கருவியினால் உண்டாக்கப்படும் மின்காந்த ஊடகத்தின் ஊடுருவும் கதிர்கள். பொதுவாக இது ஊடுகதிர்ப் படங்களைக் குறிக்கிறது.

X wave : எக்ஸ் அலை : இதயக் கீழறை சுருக்கத்தின் போது மூவிதழ் வால்வு கீழ் இடம் மாறுவதாலும் மேலறை விரி வடைவதாலும் கழுத்துச் சிரை அழுத்த அலை கீழிறங்குதல்.

xylene : சைலீன் : எளிதில் தீப்பற்றக்கூடிய தெளிவான திரவம் பென்சீனைப்போன்றது. பேன் நோய்க்குக் களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது.

xylocaine : சைலோகேய்ன் : உறுப்பெல்லை உணர்வு நீக்கும் லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

xylo : ஸைலோ : மரம் தொடர்பானகூடும் ஆங்கிலச் சொல்.

xylol : சைலோல் : பேன் நோய்க்குப் பயன்படும் சைலின் என்ற களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

xylometazoline : சைலோமெட் டாசோலின் : மூக்குக் குருதி நாள இறுக்க மருந்து விரைவாகக் குணமளிக்கும்; ஆனால் குறுகிய காலமே வினை புரிகிறது. அடிக்கடிப் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு உண்டாகும்.

xylose : சைலோஸ் : மரச்சர்க்கரை.

xylose test : சைலோஸ் சோனை : உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும்.