பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Y

yam : வள்ளிக்கிழங்கு : உணவாகப் பயன்படுத்தப்படும் மாவுப் பொருள்கொண்ட கிழங்கின் வேர்.

Yankauer's speculum : யான்கா வெர் விரிகருவி : கொடையின் மூக்கை ஒட்டிய பகுதியை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் விரி அகற்சிக் கருவி (உடற்குழி நோக்கி).

yawn : கொட்டாவி : வாயை தன் விருப்பமின்றி திறந்து, நீண்ட ஆழ்ந்த காற்றை உள்ளிழுப்பதோடு உடலையும் நெளிப்பது, களைப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

yawning : கொட்டாவிவிடுதல் : வாய் அகலத்திறந்து ஆழ்ந்து காற்று உள்ளிழுத்தல்.

yaws : யாஸ் நோய்; தொற்றுத் தோல்நோய் : வெப்ப மண்ட லங்களில் காணப்படும் கிரந்தி நோய் போன்ற ஒரு தொற்றுத் தோல் நோய். மேகக் கிரந்தி நோய்ச் சோதனை (வாசர்மன் சோதனை) மூலம் இது கண்டு அறியப்படுகிறது.

Y-axis : ஒய் அச்சு; நெடுக்கு அச்சு : நெடுக்கு அச்சினை ஒட்டி கிடையச்சு தூரத்தை அளப்பது அல்லது நெடுக்கு அச்சு துரத்தை அளப்பது.

Y body : ஒய் உடலம் : பாலின வகையில் ஆண் அணுக்களான, வாய் சீதச்சவ்வு, இழை அணு மூலங்கள், விந்தணுக்கள், பனிக் குட அணுக்கள் ஆகியவற்றின் உட்கருக்களின் மாற்றுப் படி நிலை. இடைப்படி நிலைகள் ஒளிரும் சாயமேற்கும் போது காணப்படும் ஒய்நிறப் பிரியை ஒத்த ஒரு உருள்திரள்.

Y cartilage : ஒய் குருத்தெலும்பு : நெகிழ் நாரிய உள்ளிடப் பொருளிலுள்ள நெகிழ் இழைளகள் கொண்ட மிகவும் நெகிழ்வுத் தன்மையுடைய குருத்தெலும்பு.

Y cell : ஒய் உயிரணு : விழித்திரை யின் வெளிப்பகுதியில் காணப் படும் நரம்பு முடிச்சணு.

Y chromosome : ஒய் இனக்கீற்று : மனிதரில் ஆண் தன்மைகளை உண்டாக்கும் மரபணுக்களை ஏந்தியுள்ள பாலினக் கீற்று.

Y descent : ஒய் இறக்கம் : இதய மேலறை காலியாகி வலது கீழறை நிரம்பும் சமயத்தில்