பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

angioid

118

anhidrotics


2. காலையில் பல் தேய்க்கலாம்; வாய் கழுவலாம். ஆனால், தண்ணீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், 3. பரிசோதனை முடிந்து உடனே வாகனங்களை ஒட்டக்கூடாது. அமெரிக்காவில் அந்தப் பரிசோதனையை 'வடிவக்குழாய்' இதய அழுத்த அளவீடு (Cardiac Cathetereization) என்கின்றனர்.

angioid : இரத்த நாளங்களை யொத்த.

angioma : குருதிக் கட்டி இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டி.

angiology : குருதி நாளவியல்; உடற் குழாயியல்; குழலியல் : குருதிநாளங்கள், ஊனீர் நாளங்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

angitis : நாளவீக்கம் : இரத்த நாளம் அல்லது நிணநீர் நாளம் வீங்கியிருத்தல்.

angioma : குருதி நாளக் கட்டி : இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டு.

angiooedema : குருதி நாளழற்சி : இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சியினால் மரணம் நேரிடலாம். குரல்வளை அழற்சியினால் உடனடியாக நாளங்க ளிலிருந்து ஊனீர் அண்டைத் திசுக்களுக்குள் ஊடுருவிச் செல்கிறது. வீக்கமும் ஏற்படுகிறது.

angioplasty : குருதிநாள ஒட்டறுவை மருத்துவம்; குருதிக் குழாய்ச் சீரமைப்பு; குழல் அமைப்பு : இரத்த நாளங்களில் இழைம அறுவை மருத்துவம் செய்தல்.

angiosarcoma : குருதிநாளப் புற்றுக் கட்டி; குருதிக் குழாய்ப் புற்று; குழல் சதைப் புற்று : இரத்த நாளங்களில் உண்டாகும் உக்கிரத் தன்மைவாய்ந்த கட்டி.

angiospasm : குருதிநாள இசிப்புத் தசைச் சுருக்கம்; குழாய் இசிவு : குருதி நாளங்களில் ஏற்படும் கடுமையான தசைச் சுரிப்பு நோய்.

angle : கோணம்.

angle of mandible : கீழ்த்தாடைக் கோணம்.

anguish : உடல் நோவு : பொறுக்கவியலா வேதனை.

anheiation : குறுமூச்சு; மூச்சுத்திணறல்.

anhidrosis : வியர்வைக் குறை நோய்; வியர்வையின்மை : வியர்வை போதிய அளவில் கரக்காததால் உண்டாகும் நோய்.

anhidrotics : வியர்வைக் குறைப்பு மருந்து : வியர்வைத்