பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Z

zactirin : ஸாக்டிரின் : எத்தோ ஹெப்டாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zafirlukast : ஸ்ஃபிர்லுகாஸ்ட் : மிதமான, நடுத்தரமான ஆஸ்துமா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும், குறைவான நேரம் செயல்படும் வாய்வழி கொடுக்கப்படும் லுயூக்கோடிரையின் எதிர்ப்பி.

załcitabine : ஸால்சிடாபைன் : மனித எதிர்ப்பு சக்தி குறை வைரஸிலுள்ள ரிவர்ஸ் டிரான் ஸ்கிரிப்டேஸ் என்னும் நொதியைக் கட்டுவதற்கான, டைடியாக்ஸி நொதியைக் கட்டுவதற்கான, டைடியாக்ஸிசிஸ்டிடின் எனும் நியூக்ளியோசைடு கட்டுப்படுத்தி.

zangal : ஸங்கால் : முறையாக உள்வரியிடப்படாத தாமிர சமையல் பாத்திரங்களின் மேல் காய் அமிலங்களின் செயலால் உண்டாகும் தாமிரச அசெட்டேட்.

Zang's space : ஸே(ங்னக்) வெளி : ஜெர்மன் அறுவை மருத்துவர் கிறிஸ்டோஃப்ஃசேங் விவரித்த, காரையெலும்பு மேல் பள்ளத்தில் ஸ்டெர்னோமேஸ் டாயிடு தசையின் இருகீழ் தசை நார்களுக்கிடையேயுள்ள இடைவெளி.

zantac : ஸான்டாக் : ரனிட்டிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zaranthan : ஸாரன்தன் : மார்பகம் இறுகுதல்.

Zarontin : ஸாரோன்டின் : இலேசான காக்காய் வலிப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எத்தோச்சிமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zastat : ஸாஸ்டாட் : நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மெட்ரோனிடாசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து.

Zaufal's sign : ஸாஃபால்குறி : ப்ராக் நகர, நாசியியலார் எமானுவெல்(2)ஸாஃபல், பெயர் கொண்ட சேண வடிவ மூக்கு.

Z-axis : இஸ்ட் அச்சு : இஸ்ட்டின் மதிப்பை அளப்பது இந்த அச்சு ஊடேதான். இதில் எக்ஸ் மற்றும் ஒய்யின் மதிப்பு (ஸைஃபர்) பூஜ்யம்.